அழுகை
உண்மை உணர்வுடன் உதவும் கரங்களை கீழ்தர விதத்தில் சீண்டி பார்பது நியாமற்றது, கண்டனத்துக்குரியது.
கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (CTBC-www.ctbc.com) பல்லாயிர கனடா தமிழர்களின் அன்பினையும், நம்பிக்கையையும் பெற்ற சுதந்திர வர்த்தக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். அது சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்க்கு உதவும் முழுநோக்கோடு (மார்கழி/26/2004) காலை தொடக்கம் 3500 மேற்பட்ட (மார்கழி/28/2004-காலை வரை) மக்களின் சிறு சிறு துளியான பங்களிப்பை உள்வாங்கி, ஒருங்கிணைத்து, நேரடி அவசர உதவிக்கு கிடைக்க வழி செய்தது, தொடர்ந்து செய்கின்றது. கனடாவில் இருந்து சென்ற வைத்திய குழுவிற்கு தேவையான மருந்துகளுக்கு நிதி (www.tamildoctors.org); மட்டக்களப்பு ஆயர் மூலம் அங்கிருக்கும் மக்களுக்கும், தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகம்(www.troonline.org)் மூலமும், மற்றும் பல வழிகள் மூலமும் உதவி தொடர்கின்றது.
கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அதிபர் இளையபாரதி முன்நின்று விழி அயராமல், குரல் ஒயாமல், பல இடர்களை சமாளித்து கலைஞ்ஞர்கள், தொண்டர்கள், வர்த்தகர்கள் துணை கொன்டு இந்த அவசர நிதி சேகரிப்பலும், நேரடியாக பாதிகப்பட்டோர்களுக்கு போய்சேர்வதிலும் கவனமுடன் உழைக்கின்றனர்.
அப்படியிருக்க, கனடா உலகத்தமிழர் அமைப்பும் (www.worldtamils.com) (கனடாவில் புலிகளின் அதிகார பூர்வற்ற பிரதிநிதி), அதன் நேரடி ஆதரவை பெற்ற சகோதர வனோலியான கனடிய தமிழ் வானொலியும் (www.ctr24.com) தன் நேயர்கள் ஒலிபரப்பாளர்கள் மூலம் கீழ்தர விமர்சனங்களை முன்வைத்தது வேதனைக்குரியது.
"இலங்கை அரசிடம் நிதி போகபோகுது"
"இளையபாரதி பணத்தை சுருட்டி கொண்டு ஓடப்போகின்றார்"
"கிறீஸ்தப பாதர் மூலம் ஏன் நிவாராணம்?"
இப்படிபட்ட நேரடியியான மறைமுகமான தாக்கங்களை தாங்காமல் இளையபாரதி அவர்கள் (மார்கழி/26/2004-இரவு ~9:00) நிகழ்ச்சியில் கண்ணீீர் சிந்தி அழுதார். உதவிக்காக வைத்திய குழுவொன்றை வழிஅனுப்பிவிட்டு விளக்கம் அழித்தது கொண்டிருந்த வைத்தியர்கள் முன்நிலையில் இது நடந்தது.
உதவி வேண்டி அழும் மக்கள் அங்கே, உதவி செய்து அழும் உள்ளங்கள் இங்கே.
தோழர்களே: உங்களுக்கு கேள்விகள் சந்தேகங்கள் இருக்குமானால் நேரடியாக, பண்புடன் கேழுங்கள். ஆனால் பண்பற்ற மனிதம் அற்ற முறைகளில் தாக்காதீர்கள்.
இறையே:
அவர்கள் தம்மை அறியாமல் செய்யும் இச்செயலை மன்னித்து, உண்மையை உணர வைப்பீராக.
பி.கு:
இதன் பின்னர், இக்கட்டான இச் சூழலில் இப்படிப்பட்ட கீழ்தர விமர்சனங்களுக்கு மேலும் வான் அலையில் இடமளிப்பது இல்லை என்று கனடிய தமிழ் வானொலி உறுதி.