அழுகை
உண்மை உணர்வுடன் உதவும் கரங்களை கீழ்தர விதத்தில் சீண்டி பார்பது நியாமற்றது, கண்டனத்துக்குரியது.
கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (CTBC-www.ctbc.com) பல்லாயிர கனடா தமிழர்களின் அன்பினையும், நம்பிக்கையையும் பெற்ற சுதந்திர வர்த்தக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். அது சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்க்கு உதவும் முழுநோக்கோடு (மார்கழி/26/2004) காலை தொடக்கம் 3500 மேற்பட்ட (மார்கழி/28/2004-காலை வரை) மக்களின் சிறு சிறு துளியான பங்களிப்பை உள்வாங்கி, ஒருங்கிணைத்து, நேரடி அவசர உதவிக்கு கிடைக்க வழி செய்தது, தொடர்ந்து செய்கின்றது. கனடாவில் இருந்து சென்ற வைத்திய குழுவிற்கு தேவையான மருந்துகளுக்கு நிதி (www.tamildoctors.org); மட்டக்களப்பு ஆயர் மூலம் அங்கிருக்கும் மக்களுக்கும், தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகம்(www.troonline.org)் மூலமும், மற்றும் பல வழிகள் மூலமும் உதவி தொடர்கின்றது.
கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அதிபர் இளையபாரதி முன்நின்று விழி அயராமல், குரல் ஒயாமல், பல இடர்களை சமாளித்து கலைஞ்ஞர்கள், தொண்டர்கள், வர்த்தகர்கள் துணை கொன்டு இந்த அவசர நிதி சேகரிப்பலும், நேரடியாக பாதிகப்பட்டோர்களுக்கு போய்சேர்வதிலும் கவனமுடன் உழைக்கின்றனர்.
அப்படியிருக்க, கனடா உலகத்தமிழர் அமைப்பும் (www.worldtamils.com) (கனடாவில் புலிகளின் அதிகார பூர்வற்ற பிரதிநிதி), அதன் நேரடி ஆதரவை பெற்ற சகோதர வனோலியான கனடிய தமிழ் வானொலியும் (www.ctr24.com) தன் நேயர்கள் ஒலிபரப்பாளர்கள் மூலம் கீழ்தர விமர்சனங்களை முன்வைத்தது வேதனைக்குரியது.
"இலங்கை அரசிடம் நிதி போகபோகுது"
"இளையபாரதி பணத்தை சுருட்டி கொண்டு ஓடப்போகின்றார்"
"கிறீஸ்தப பாதர் மூலம் ஏன் நிவாராணம்?"
இப்படிபட்ட நேரடியியான மறைமுகமான தாக்கங்களை தாங்காமல் இளையபாரதி அவர்கள் (மார்கழி/26/2004-இரவு ~9:00) நிகழ்ச்சியில் கண்ணீீர் சிந்தி அழுதார். உதவிக்காக வைத்திய குழுவொன்றை வழிஅனுப்பிவிட்டு விளக்கம் அழித்தது கொண்டிருந்த வைத்தியர்கள் முன்நிலையில் இது நடந்தது.
உதவி வேண்டி அழும் மக்கள் அங்கே, உதவி செய்து அழும் உள்ளங்கள் இங்கே.
தோழர்களே: உங்களுக்கு கேள்விகள் சந்தேகங்கள் இருக்குமானால் நேரடியாக, பண்புடன் கேழுங்கள். ஆனால் பண்பற்ற மனிதம் அற்ற முறைகளில் தாக்காதீர்கள்.
இறையே:
அவர்கள் தம்மை அறியாமல் செய்யும் இச்செயலை மன்னித்து, உண்மையை உணர வைப்பீராக.
பி.கு:
இதன் பின்னர், இக்கட்டான இச் சூழலில் இப்படிப்பட்ட கீழ்தர விமர்சனங்களுக்கு மேலும் வான் அலையில் இடமளிப்பது இல்லை என்று கனடிய தமிழ் வானொலி உறுதி.
1கருத்துக்கள்
நக்கீரன் தாங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. சுனாமியின் போது பல ஊடகங்கள் பணம் சேர்த்தன. அவற்றில் யார் முழுமையாகப் பணத்தைக் கொடுத்தார்கள் என்று ஆண்டவரை?? தவிர வேறு ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. ஆனால் எல்லா ஊடகங்களும் கொஞ்சமாகவது பணத்தை எடுத்திருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. சில ஊடகங்கள் முழுதாக எடுத்து விட்டன என்று அந்த ஊடகத்தில் கீழ் வேலை செய்யும் சிலர் புலம்பியதும் எனக்குத் தெரியும். எல்லாமே முதலாளிகளி;ன் பைக்குள் போய் விட்டது. இதை ஒருவரும் நிரூபிக்க முடியாது. இதற்கெல்லாம் முடிவு வைக்க வேண்டும் எனின் இப்படியான அவல நேரங்களில் மக்கள் முடிந்த வரை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை அனுப்ப முடிந்தால் அனுப்பலாம் இல்லாவிடின் பேசாமல் இருந்து விடலாம். எதற்காக கஷ்டப்பட்டுத் தாம் உழைத்த பணத்தால் சும்மா இருக்கும் முதலாளிகளைக் கொழுக்க வைக்க வேண்டும்.
என் நண்பர் ஒருவருக்கு கடந்த வாரம் அவருக்குத் தெரிந்த ஒருவர் போன் பண்ணியிருந்தார். தனக்குக் கொஞ்சப் பணம் அனுப்ப முடியுமா தனது மீன்பிடி வலை சுனாமியோடு போய் விட்டது. தொழிலுக்கு வழியில்லை. அனுப்பினால் தான் ஏதாவது செய்து பிழைத்து கொள்ளுவேன் என்று. உங்கே உதவிப் பணம் கிடைக்கவில்லையா என்று என் நண்பன் கேட்டதற்கு சும்மா காட்டுவதற்காகச் சில இடங்களில் செய்தார்கள். அத்தோடு எல்லாமே முடிந்து விட்டது என்று.
Post a Comment
<< Home