உலகமயமாக்கல்
பன்னாட்டு பொருட்கள் உண்டு,
எம் பசி இன்னும் தீரவில்லை
அமெரிக்க மயம் எங்கும்,
பாதியுடை எமக்கில்லை
கார்களுக்கு வீதி போட்டு,
வாழ்வதற்க்கு இடமில்லை
ஒளிர்கின்ற இந்தியாவில்,
காற்றும் நீருக்கும் சண்டை எங்கும்
கம்பியூட்டர் காலமிது,
நாங்கள் இன்னும் பட்டிக்காடு
பெரிய கப்பல் விட்டு அள்ளி,
மீன்கள் கடலில்லை
அராய்ச்சி விதை தந்து,
அரிசி விதை அபகரிப்பு
பலவித மருந்து செய்வர்,
பச்சிலையும் நமக்கில்லை
அடுத்த சந்ததி மீண்டுமாம்,
பொறுத்திருக்கட்டாம்.
அப்ப நாம்.
மாற்று வழிகள் உண்டோ?
உண்டு.
http://www.forumsocialmundial.org.br/index.php?cd_language=2 http://xat.org/
http://www.goodnewsindia.com/homepage.php
வேறு ஒரு உலகம் எமக்கு வேண்டும்.
உண்மை என்னவென்றால்
சுவைமிகு உணவு உண்ண
ஒரு நல்ல வீடு கட்ட
விதவித பொருட்டள் வாங்க
பலவித இடங்கள் செல்ல
புதுபுது கலைகள் செய்ய
எமக்கும்் பேராசை, அது முடியுமா
இவ்வுலகில் எல்லாரோலாலும் முடியுமா?
முடியும், முடியும்.
http://www.bfi.org/option.htm
http://www.evolve.org/pub/doc/index2.html
0கருத்துக்கள்
Post a Comment
<< Home