மூன்று கேள்விகள்?
வலைப்பூவின் மேதைகளே:
மதி மங்கி, விரக்தி ஓங்கி
மாயையின் விளிம்பில் நின்று
மனிதன் குமுறினால் எப்படி இருக்கும்?
ஐயோ, தமிழ் சாகிறது.
சினிமாவில் புதுமை இல்லை.
அரசியல் ஒரு சாக்கடை.
சாதி இல்லை, சாமி வேண்டாம்.
கொச்சதனமாக இல்லை?
காடும், கடலும் சாகின்றது
காற்றும், நீரும் விலை போகின்றது
மழை அமிலம் ஆகின்றது
ஆபிரிக்காவில் எயிட்ஸ்
இந்தியாவில் ஏழ்மை, பசி
போர், பாசிகம்
சர்வதிகாரம்
வாருங்கள் வலைப்பூவின் மேதைகளே
உலகுக்கு உதவுவோம்
புது உலகு படைப்போம்
சும்மா அலட்டாதையும்
வீட்டு பிரச்சினையே தீர வழிகாணோம்
உண்டு, உறங்கி, மேய்ந்து, இரும்.
சொல்லுங்கள்
இது வெறும் விளையாட்டுத்தானே
யுனிபொம்மர்் சொன்னது போல
இது வெறும் விளையாட்டுத்தானே?
வாழ்வு வெறும் லீலைதானே?
வலைப்பூவின் மேதைகளே
இம் மூன்று கேள்விகளையும் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்.
1. ஆண்டவனாய் நீ இருந்தால், உலகை படைக்க நினைத்தால், எப்படி நீ உலகை படைப்பாய்?
2. நீ சுதந்திரமானவனா?
3. உன் வாழ்வின் சக்தியை நீ எத் துறை, திசை, மனிதர் நோக்கி செலுத்துகின்றாய்? ஏன்?
1கருத்துக்கள்
அய்யா கீரரே,
நீங்க சாக்ரமண்டோவில் இருக்கிறீர்களா..
சாக்பீ( Sacbee) ல் இருந்து சுட்டி/லிங்க் கொடுத்திருக்கீங்களே.
அதான் கேட்டேன்.
Post a Comment
<< Home