ஒப்பிடுதல்
ஒப்பீடு: ஈழத் தமிழர், தமிழகத் தமிழர்் என்ற ஒரு மேலோட்டமான பதிவு இட்டேன். அப்பதிவு ஒரு விபரிய பதிவு அன்று. ஒரு குறும்பு பதிவு என்றாலும் மிகையாகாது. ஆயினும், தனி நபரையோ, குழுவையோ வஞ்சித்து நான் எழுதவில்லை. (அப்பதிவுக்கு சோழியான் அவர்கள் முன்வைத்த சில கருத்துகளை உள்வாங்கிய பதிப்பே இது.)
இரு துருவ முறையில் ஒப்பிட்டது, ஒருவித கவன ஈர்ப்பு தந்திரமே (ஒத்துகொள்கின்றேன்). பிரிவினைகளை முன்நிறுத்தல் மூலம் நாம் உணர்வு ரீதியாக கவனத்தை ஈர்க்க முடியும். உதாரணமாக, கிழக்கு எதிர் வட ஈழம், ஆரியர் எதிர் திராவிடர், வட எதிர் தென் இந்தியர்்.
ஒப்பிடுதல் ஒரு பகுத்தாய்வு முறையே. ஆயினும், சீரிய ஒப்பிடுதல் அத்தாட்ச்சிகளுடன் விபரிக்கபடல் வேண்டும். எனது பதிவு சீரிய ஒப்பிடுதல் இல்லை. உதாரணமாக, ஈழத்து தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று அடையாளப்படுத்துவது இப்போது குறைவு. ஆனால், தமிழக தமிழர் தாம் இந்தியர் என்பதை நிலை நிறுத்த என்றும் தயங்குவதுதில்லை. வெளிநாடுகளில் நாம் அனைவரும் தெற்காசியர் அல்லது இந்தியர் என்ற குடைக்குள் அடையாளம் தேடுபவர்கள். எந்த அடையாளத்தை யார் எப்பொழுது முன்நிறுத்துகின்றார்கள் என்று கணக்கெடுப்பு கிடையாது, அப்பதிவு ஒரு குத்து மதிப்பே.
மேலும் நான் ஈழ அரசியலை பயங்கரம்/பயங்கரவாதம் என்று குறிப்பிட்டேன். ஆனால் நான் போராளிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை. அரச பயங்கரவாதமே ஈழ போராட்டத்தின் அடிப்படை காரணிகளில் ஒன்று.
ஒப்பிடுதல் மூலம் எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தி விடுகின்றோம். ஒப்பிடுதல் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கிடையேதான் பொருத்தமானதாக அமையும். ஈழ தமிழக சமூகங்களுகிடையான சமூக, கலாச்சார, வரலாற்று தொடர்புகளை விபரிக்கும் நூற்கள் பல உண்டு. ஆயினும், இன்றைய ஈழ தமிழக சமூகங்களின் பொருளாதார, கலாச்சார, கொள்கை ஒற்றுமை வேற்றுமைகளை நேரடியாக ஒப்பிட்டு விளக்கும் படைப்புக்கள் ஏதும் உண்டா?
ஒப்பிடுதல் மூலம் ஒரு போட்டி மனநிலை முன்வைக்கப்படுகின்றதா?
யார் திறமையானவர்கள் என்று பின்னணியில் கேள்வி எழுப்பப்படுகின்றதா?
பி.கு:
சோழியான்:
1. பல நிதர்சன படைப்புக்களை பார்த்திருக்கின்றேன். "கடலோர காற்று" நான் நேசிக்கும் கலைப்படைப்பு.
2.மலையக தமிழரை சில ஈழ தமிழர்கள் வீட்டு, வயல் வேலைகளுக்கு கொத்தடிமைகள் போன்று பயன்படித்தியது பதியப்பட்ட வரலாறு. ஈழவேந்தன் குறிப்பிட்டது போல மலையக தமிழரின் உரிமைகள் இழுத்தடிக்கப்பட்டதற்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
3."சீரியசான ஆக்கள்" எதிர் "சினிமா பார்க்கலாம்" கன்னத்தை முத்தமிட்டால் படத்தின் உள்வாங்கலே.
4.சரியான கேள்விகள் "அறிவுஞானத்திற்கு" படிக்கற்களே.
மூர்த்தி:
உங்களை போல சில விடயங்களை நேருக்கு நேர் சொல்ல முயற்ச்சிக்கின்றேன்.
மாயவரத்தான்:
ஈழவர்கள் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கை ஒரு அழகிய தேசம். அங்கு எங்கும் பூரண சுதந்ரத்துடன் தமிழன் மற்றவர்கோளுடு கூடி வாழ வேண்டும், இந்தியா போல. உரிமைகளை மதிக்கும் காக்கும் சுதந்திர இலங்கையை ஈழதமிழர்கள் நேசிக்க பின் நிற்க மாட்டார்கள்.
ஈழநாதன்:
இன்றைய ஈழ தமிழக சமூகங்களின் பொருளாதார, கலாச்சார, கொள்கை ஒற்றுமை வேற்றுமைகளை நேரடியாக ஒப்பிட்டு விளக்கும் படைப்புக்கள் ஏதும் உண்டா?
2கருத்துக்கள்
ஈழநாதன் எனக்கு எழுதிய பதில் தொடர்பாக. முதலில் நான் சரியாய் வாசிக்கவில்லை. காக்காய் எச்சம் விடுவது போல் விட்டு சென்ற, பல கமெண்ட்களில் ஒன்றாக சற்று கவனக்குறைவுடன் எழுதபட்டது. அதனால் மலையக மக்கள் அநாதையானதற்கு ஈழத்தமிழர் காரணம் என்பதை ஒப்புகொள்ளும் தொனி வந்துவிட்டது. அதற்கு மன்னிக்கவும். மலையக தமிழர்களின் பிரச்சனைக்கு, பிரிடீஷ், சிங்கள அரசுகளைவிட, இந்தியாவே முதன்மை காரணம். பெரிய துரோகம் இந்தியாவிடமிருந்துதான் வந்தது. நான் எழுதியதில் உத்தேசித்தது வேறு.
பொதுவாக மலையக தமிழர் குறித்து ஈழத்தமிழர் பேசுவதில்லை. அவர்களை இழிவாய் பார்கும் பார்வையும் உண்டு. இது நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். இதன் அடிப்ப்டையில், ஒரு ஈழத்தமிழர் அவர்கள் பற்றி கரிசனமாய் பேசுவத்ற்கே என் பாராட்டை தெரிவித்தேன். மற்றபடி நீங்கள் சொன்னதை ஒப்புகொள்கிறேன்.
கையில் குசும்புடன் அலையும் இந்திய தமிழர்களிடம் (என்னையும் சேர்த்து) கவனமாய் இருங்கள்! அன்புடன்..
நன்றி ரோசாவசந்த்.
Post a Comment
<< Home