<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Thursday, December 16, 2004

ஒப்பீடு: ஈழத் தமிழர், தமிழக தமிழர்

வரலாற்றால், பண்பாட்டால், மொழியால் ஒன்று பட்ட இரு சமூகங்களின் வேறுபாடுகளை தனித்துவங்களை ஒப்பிடுதல், பல நிலைகளில், பல காரணங்களுக்காக செய்யப்படுவதுண்டு. இதோ ஒரு நேரடி ஒப்பீடு.
மூன்று மில்லியன்அறுபது மில்லியன்
முதலில் தமிழ்முதலில் இந்தியன்
அரசியல் பயங்கரம்/பயங்கரவாதம்அரசியல் சாக்கடை
இடியப்பம், புட்டுஇட்லி, தோசை
கலை படைப்புக்கள், திரைப்படம் பண்ண தெரியாது40% எழுத படிக்க இனித்தான்
மலையக தமிழரை கூலிகள் ஆக்கியதுஈழ அகதிகளை கைதிகள் ஆக்கியது
"சீரியசான ஆக்கள்""சினிமா பாக்கலாம்"
யாழ் தமிழ், மட்டக்களப்பு தமிழ்தமிழ், பல தமிழ்கள், தமிங்கிலிஸ்
"வெள்ளாளர்" ஆதிக்க சக்திகளாக உணரப்படல்"பிராமணர்" ஆதிக்க சக்திகளாக உணரப்படல்
வெளிநாடு நம்நாடுவெளிநாடு தேன்நாடு
ஈழம் சிங்கப்பூர் (போல) ஆகிடனும்தழிழகம் சிங்கப்பூர் (போல) ஆகிடனும்

10கருத்துக்கள்

At 4:07 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

//கலைப்படைப்புகள் பண்ணத் தெரியாது//
இந்த வருட இறுதிக்குள் நான் கேள்விப்பட்ட மிகப்பெரிய நகைச்சுவை.

 
At 5:09 PM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 5:19 PM, Blogger நற்கீரன் said...

ஈழநாதன்:

தமிழக கலைஞ்ஞர்களால் நாடாத்தப்படும் நிகழ்சிகளுக்கு இங்கிருக்கும் வரவேற்பு, ஈழவர் முயற்சிகளுக்கு இல்லை. அதைபற்றி இங்கு பலர் கவலைப்பட்டுக் கொள்வார்கள். அதை சொல்லாமல் சொல்ல வந்து வம்பில் மாட்டிக்கொண்டேன்.

 
At 6:01 PM, Blogger Moorthi said...

அஜீவன் என்று ஒரு அண்ணா. கலைப் படைப்புகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.

 
At 9:36 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அப்படியா.பரவாயில்லை நம்பி நம்பி ஏமாந்தவன் ஈழத்தமிழன் என்று வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
முடிந்தாலெனது குறும்படங்களுக்கான வலைப்பதிவு சலனச்சுருளில் வலையேறிய குறும்படங்களைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.ஈழத்தமிழர் நடத்தும் கலைவிழாக்களுக்கு கூட்டம் வரத்தான் செய்கிறது.ஆனால் தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் வரும் நிகழ்வுகள் மட்டுமே பத்திரிகைகளின் பார்வையைப் பெற்றுவிடுகின்றன.அண்மையில் நடந்த உலக தமிழ் குறும்பட விழாவில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டவை ஈழத்தவருடையவை.இப்போது கோடம்பாக்கத்துக் காற்று லண்டனிலும் கனடாவிலும் வீசுகிறது.அதில் அடிபட்டுப் போகாமலிருந்தால் விரைவில் ஈழவர் திரைப்படங்கள் தமிழகத்திலும் திரையிடப்படும்.

 
At 9:37 PM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

if u wantto know more about Eelavar cinema, please visit to www.thamilfilmclub.com

 
At 11:07 PM, Blogger ROSAVASANTH said...

வெள்ளாள ஆதிக்கம், பார்பன ஆதிக்கம் என்பதும். மலையக தமிழர்கள் பற்றி குறிப்பிட்டதும் ஆரோக்கியமான விஷயம்.

 
At 11:10 PM, Blogger ROSAVASANTH said...

நீங்கள் ஈழத்தமிழர் என்ற நினைப்பில் பாராட்டினேன். இல்லையெனில் திரும்ப எடுத்துகொள்கிறேன்.

 
At 1:32 AM, Blogger மாயவரத்தான்... said...

//At 11:10 PM, ROSAVASANTH said...
நீங்கள் ஈழத்தமிழர் என்ற நினைப்பில் பாராட்டினேன். இல்லையெனில் திரும்ப எடுத்துகொள்கிறேன்.//

hahahha...Nakkeeran, please add this thing also in your list!!!

 
At 1:39 AM, Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா மலையகத் தமிழர்களை கூலிகளாக்கியதில் வடபகுதித் தமிழ் அரசியல்வாதிகள்,சிங்கள தலைமை,பிரித்தானிய அரசாங்கம் இவற்றுடன் கூடவெ இந்திய அரசியல் தலைமைக்கும் பங்குண்டு.ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள தலைமையுடன் சோரம் போனார்கள்.வலுவுள்ள நிலையில் இருந்த இந்திய தலைவர்கள் விடாப்பிடியாக நின்றிருந்தால் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்க இலங்கை அரசால் முடிந்திருக்காது.

 

Post a Comment

<< Home