நான்கு வகை மனிதர்கள்
லியோ ரொல்ஸ்ரோய் வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்டான்?
எதுவுமில்லை என்று உணர்ந்தான்.
ஏன் இதனை மனிதர் உணரவில்லை?
இக்கேள்வியின் பதிலை வைத்து, மனிதரை நான்கு வகையாய் பிரித்தான்்.
அவன் சொன்னான், சிலர் மடையர்களாக இருக்கின்றார்கள். பூக்கள் போல, விலங்குகள் போல "வாழ்வாங்கு வாழ்ந்து" சாவதே இம் மனிதர். இவர்கள் முதல் வகை.
சிலர் வாழ்வின் வெறுமை அறிந்தும், சிந்தனைக்கு மதில்கள் கட்டி வாழ்கின்றனர். குடும்பம், வேலை, சமயம் என்று கட்டுன்று கிடக்கின்றனர். இவர்கள் இரண்டாம் வகை.
மூன்றாம் வகை மனிதர்கள், வாழ்வின் போலி புரிந்தவுடன் தம்மை மாய்த்து கொள்கின்றார்கள். இவர்கள் வீரர்கள் என்கிறான் லியோ ரொல்ஸ்ரோய்.
நான்காம் வகை: வாழ்வின் வெறுமை அறிந்தும் கோழைத்தனமாய், நெஞ்சிடியோடு, "அர்த்தம் என்றொரு நாள் தோன்றிட மாட்டாதா" என்ற அற்ப ஆசையில் வாழ்ந்து சாகின்றனர்.
நான் எந்த வகை?
சில வேளை இரண்டாம் வகை, சில வேளை நான்காம் வகை, சில வேளை ...
மேலும் தகவல்களுக்கு:
http://flag.blackened.net/daver/anarchism/tolstoy/conf8.html http://www.utoronto.ca/tolstoy/journal.html
http://www.ltolstoy.com/
0கருத்துக்கள்
Post a Comment
<< Home