<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, December 24, 2004

இணையத்தில் சுய கல்வி

சுய கல்வி என்றல் என்ன?
கற்றல் தனி மனித, மனித இன மேம்பாட்டிற்க்கு அவசியம். குருவின் வழிகாட்டலும், சுற்றாடலும் கல்விக்கு அவசியம் எனினும் கற்றலுக்கு தன்னார்வு செயற்பாடே அடிப்படை. சுய கல்வி எனப்படுவது, ஒவொரும் மனிதனும் தனது தேவையை உணர்ந்து, தனது வழிகாட்டலுடன், பல வழிமுறைகளில் கற்பதையே குறிக்கும். கல்லூரிக் கல்விக்கு அப்பால் அல்லது புறம்பால் மேற்கொள்ளப்படும் கற்றலை சுயகல்வி சுட்டி நிற்க்கின்றது. சுய கல்வியை பற்றி மேலும் தகவல்களுக்கு:

http://www.autodidactic.com/
http://www.infed.org/hp-intro.htm
http://www.creatinglearningcommunities.org/
http://www.elearnspace.org/
http://www-jime.open.ac.uk/98/4/

சுய கல்வி ஏன்?
வாழ்வே ஒரு கற்கை நெறிதான். சுய கல்வி என்பதன் மூலம் தீவரப்படுத்தப்பட்ட கற்றல் செயற்பாடையே குறிக்கும். வாழ்க்கையை திறன்பட வாழ்வதற்க்கு வேண்டிய அறிவை பெற தேவையானதே சுய கல்வி.

இன்று, பல்கலைகழகங்கள் அதிகார-உத்யோக வர்க்க கொழ்கைகளை பிரதிபலித்து, தொழில் நிலை கல்வியையே முதன்மை படுத்துகின்றன. தம்மை நோக்கிய ஒரு பிம்மமாக்கலையும் தோற்றுவித்து காக்கின்றன. இந்நிலையிலும் சுய கல்வி எமது பன்முக அறிவை வளர்க்க தேவைப்படுகின்றது.

இணையம் சுய கல்விக்கு எப்படி உதவும்?
தகவல்களை இணையம் சேமிக்கவும், பகிரவும் உதவி சுய கல்வியை இலகுவாக்கி இருக்கின்றது. இதன் சிறப்பான எடுத்துக்காட்டாக திறந்த பாட காப்பகம்-MITs Open Course Ware், பொது களஞ்சியம் - Wikipedia ஆகியவை திகழ்கின்றன. மேலும் பல தளங்கள் உள்ளன, சில கீழே தரப்பட்டுள்ளன.

http://ocw.mit.edu/OcwWeb/index.htm
http://www2.fmg.uva.nl/sociosite/topics/index.html
http://en.wikipedia.org/wiki/Main_Page
http://www.ulib.org/html/index.html
http://www.howstuffworks.com/

http://mathworld.wolfram.com/

http://www.caida.org/outreach/iec/courses/
http://patft.uspto.gov/netahtml/search-bool.html
http://micro.magnet.fsu.edu/
http://www.thelearningpit.com/
http://www.zmag.org/weluser.htm

0கருத்துக்கள்

Post a Comment

<< Home