<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, January 16, 2015

சவூதி அரேபியா - காட்டுமிராண்டிச் சட்டங்கள், பண்பாடு, சமயம்

பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது.  வாக்குப் போட முடியாது.  முறைப்படுத்தப்பட்ட விளையாட்டுக்களில் கலந்து கொள்ள முடியாது.  பெண் தான் விரும்பியபடி உடை அணிய முடியாது.  ஆணும் பெண்ணும் கலந்து படிக்க முடியாது, பணி புரியமுடியாது.  ஆண் இல்லாமல் வெளியே செல்ல முடியாது.  தனித்து வாழ முடியாது. 

யாருமே சுன்னி இசுலாமைத் தவிர வேறு சமயத்தை வெளிப்படையாகப் பின்பற்ற முடியாது.  சமயத்தை விமர்சிக்க முடியாது.  சட்டப்படி, இசுலாமிய சமயத்தை நம்பாதவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். 

காதலர் நாளைக் கொண்டாடுவது தடுக்கப்படுகிறது.  இசை, திரைப்படம் என்று வாழ்வின் கலைகள், இன்பங்கள் பொதுவில் இல்லை. 

மக்களாட்சி இல்லை.  மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை.  அரச குடும்பத்தை யாரும் சற்றேனும் விமர்சித்துவிட்டால், முட்டி தட்டி உள்ளே போட்டு விடுவார்கள். 

கல்லால் எறிவது.  சவுக்கால் அடிப்பது.  கையை வெட்டுவது.  சித்திரவதை செய்வது.  துடிக்க துடிக்க தலையைக் கொய்வது.  இதுதான் 21ம் நூற்றாண்டில் சவூதியில் நிறைவேற்றப்படும் தண்டனைகள்.  இவை அனைத்தும் அனைத்துலக மனித உரிமைகளுக்கு எதிரானவை. 

எந்தவித படைப்பாக்கமும் இல்லாமல், இயற்கையாகக் கிடைத்த எண்ணை வளத்தை விற்று செல்லம் ஈட்ட் ஆட்டிப் படைக்கிறார்கள். 

இதுதான் இசுலாமவாத புனித பூமி, சவூதி அரேபியா. 

சவூதி அரேபிய அரசையையும், தீவர சமய வாதிகளையும் வலைத்தளத்தில் விமர்சித்த ரயிவ் படாவிக்கு (Raif Badawi) $200 000 மேற்பட்ட அபராதம், 1000 சவுக்கு அடிகள், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  இவரைப் போன்று அரசை விமர்சித்த வலீட் அபுல்கர் (Waleed Abulkhair) இக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்னை.  தன்னை உடல் ரீதியாக தாக்கிய தந்தையிடம் இருந்து தப்பி தனியே வாழ முற்பட்ட சமர் படாவியை (Samar Badawi) கைது செய்தனர், வழக்குகளில் அலக்கழித்தனர்.  என்ன இழிவு. 

என்ன செல்வம்தான் இருந்து என்ன பயன், அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாவிடின். 

Labels: , ,

2கருத்துக்கள்

At 5:40 AM, Blogger Unknown said...

அவர்கள் நாகரீக உலகின் காட்டுமிராண்டிகள்.
600 ஆம் நூற்றாண்டிலிருந்து வெளி வர விரும்பாத பழமைவாதிகள்.

 
At 5:41 AM, Blogger Unknown said...


/// என்ன செல்வம்தான் இருந்து என்ன பயன், அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாவிடின் ///


அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற பழமொழி இவர்களுக்காவே உருவாக்கப்பட்டதோ என்னமோ

 

Post a Comment

<< Home