தமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழிக் கல்விக்கு மரண அடி
அதிமுக அரசு தமிழிநாட்டு அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி விரிவாக்கவுள்ளது. தாய் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை கல்வியாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் எவ்வளவு எடுத்துரைத்தும் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. அரச முறையாக தரமான கல்வி வழங்கத் தவறியதை எதோ ஒரு வகையில் மறைக்கவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
ஆங்கிலக் கல்வியே எங்கும் இருக்கிறது என்பது ஒரு மாயை. யேர்மனி, யப்பான், பிரான்சு, சீனா, உருசியா, இலங்கை போன்ற தாய்மொழிக் கல்வி நாடுகளே பெரும்பான்மை. இந்த நாடுகள் தாய் மொழிக் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு தடை இல்லை என்பதை நிரூபித்து உள்ளன. இந்தியாவில் கூட தாய் மொழிக் கல்வி வலுவாக உள்ள கேரளா ஒரு சிறந்த முன் எடுத்துக் காட்டு. அங்கு அவர்கள் தாய் மொழிக் கல்வியை விரிவாக்கவே நடவடிக்கை எடுக்கிறார்கள்.
தமிழ் வழிக் கல்வி ஆங்கில மொழி அறிவுக்கு தடை என்பதும் ஒரு நியாமான வாதம் இல்லை. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்ளலாம். அதன் பரந்த ஊடகங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆங்கில மொழியை மட்டும் அல்ல சீனம், அரபு, எசுபானியம் என்று மேலும் பல மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியை பொது மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். அரச கல்லூரிகள் கல்வித் தரத்தை அடிமட்டமாக்கி விட்டு, தனியார்மயமாக்கம் ஊடாக கல்வியை வியாபாரம் ஆக்கி விட்ட சூழலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கில வழிக் கல்வியால் தமிழ்நாடு அரச பள்ளிகளில் தாமாக தரம் உயர்ந்து விடப் போததில்லை. தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் கோல் சென்ரரில் வேலை பார்க்க தகுதி பெற வேண்டும் என்று அரசு நினைத்தால், அது ஒரு வேளை நிறைவேறலாம். இவ்வளவு காலம் பன்னாட்டு கம்பனிகளுக்கு வேலை செய்தும் இந்தியா தனாக ஒரு புத்தாக்கச் சூழலையோ, சொந்த அறிவு மூலங்களையோ கொண்டிருக்கவில்லையே என்று காரணம் தேடினால், தமிழ்நாட்டின் அரச மனப்பான்மையில் பதில் கிடைக்கும்.
இலங்கையில், மலேசியாவில் மிகவும் சிக்கலான பாதகமான சூழல்களில் தமிழ் வழிக் கல்வி முன்னெடுக்கப்படும் போது தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படுவது மிகக் கவலை தருவது.
இது தமிழ் மொழி, பண்பாடு சமூகத்தைப் பொறுத்த வரையில் பாரிய விளைவுகளைத் தரப் போகிறது. முதலாவதாக , தமிழ் வழிக் கல்வியின் மரண அடி இதுவாகத்தான் இருக்கும். இரண்டாவதாக தமிழில் அறிவு வளர விடாமல் தடுத்து. ஒரு அறிவற்ற சடங்கு மொழியாக ஆக்கும். மேற்குநாடுகளில் தமது மொழிகளை இழந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். முதற்குடிகளை, கறுப்பினத்தவர்களை, அவர்கள் எவ்வளவு தூரம் தமது அடையாளத்தை, அறிவைத் துலைத்து உள்ளார்கள். இன்று வரை அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.
இந்த நகர்வுடன் திராவிட இயக்கம் தமிழ் சமூகத்தை முற்றிலும் விலைக்கு வித்தவிட்டது என்பது தெளிவு. பகுத்தறிவைத் முதலில் தொலைத்தார்கள். சமூக நீதியை பின்னர் மறந்தார்கள். இப்பொழுது தமிழையும் புதைத்து விட்டார்கள். இதில் திமுக, அதிமுக எல்லோருமே சம பங்கு.

Labels: தமிழ்வழிக் கல்வி
2கருத்துக்கள்
தமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழிக் கல்விக்கு மரண அடி-
அருமையான பதிவு.
//அரச கல்லூரிகள் கல்வித் தரத்தை அடிமட்டமாக்கி விட்டு, தனியார்மயமாக்கம் ஊடாக கல்வியை வியாபாரம் ஆக்கி விட்ட சூழலில்//
தமிழகத்தின் பிரச்சனையை சரியா சொல்லியுள்ளீர்கள். மலேசியா, இலங்கை சென்றதால எனக்கு தமிழில் தமிழர் படிக்கும் சிறப்புகள் தெரியும். ஆனா தமிழகத்தில் தி.மு. க - இது நியாயமா? தமிழில் ஏன் படிப்பிக்கிறாய் என்று கேட்டு பதிவு எழுதும் நிலையிலே தான் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை கல்வி என்றால் ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டும்.இலங்கை என்றால் சிங்கலவங்க தமிழர்களை கொத்து கொத்தாக கொல்வதும் தமிழ் பெண்களை கற்பழப்பு செய்யும் நாடு.
தொலை நோக்குப் பார்வையுடன் தமிழுக்கே சங்கு ஊதியிருக்கிறார் ஜெயா என்கின்ற பார்ப்பனர். இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் வரும் தலைமுறை தமிழை மறந்துபோகும். தமிழ்நாட்டு தமிழர்களும் இனி படிப்படியாக மாறுவர். இனி தமிழ் மெல்ல அழியும். அதற்குத்தான் இப்பொழுதே சிலை வைத்தாயிற்று. இனி தமிழனின் மாலை போடும் சடங்கினால் தமிழ் நினைவு கூறப்படும்.
Post a Comment
<< Home