<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, April 13, 2012

குடிவரவாளர் அனுபவங்கள் 2 - கடன் பெற்ற வாழ்க்கை

கனடாவிற்கு வந்து எதாவது ஒரு வேலை பெற்றுவிட்டால் பலரும் அடித்து முந்திக் கொண்டு கடன் தருவார்கள். பேரங்காடிகள், வங்கிகள், விசா போன்ற கடன் அட்டை நிறுவனங்கள், கார் கம்பனிகள் என்று எல்லோரும் தருவார்கள். பலர் தவணை முறையில் பொருட்களை வாங்க விடுவார்கள். குறிப்பாக புதிதாக வந்தவர்கள் தளபாடங்கள், கருவிகள் வாங்க வேண்டும். எனவே கடனுக்கும், தவணை முறையிலும் சோபா, டைனிங் செட், பெட்ரூம் செட், ரிவி, மைக்ரோவே அவண் எண்டு எல்லாப் பொருட்களை வாங்கி வேகமாகச் சேர்த்துடுவம்.

அவைக்கு தவணை முறையில கட்டலாம். ஆகக் குறைஞ்ச கட்டணம் (மினிமம் பேய்மண்) செலுத்தலாம். வாடகை, தொலைபேசி என்ற எல்லாத்தையும் சேர்த்துப் பாக்கையில இவைக்கு ஆகக் குறைஞ்ச அளவில்தான் கட்டலாம். பொதுவா சாமான்கள் வாங்கிறதுக்கு வட்டி வீதம் 28%, கடன் அட்டைக்கு 19%, அதிலையும் நீங்கள் ஒன்று இரண்டு தடவை பிந்தினால் இன்னும் பல விழுக்காடுகள் உயர்ந்துவிடும். ஆகக் குறைஞ்ச அளவில் அதிக கூடிய வட்டியில் எங்களை கடன் சிறையில் இவை தள்ளி விடும். இந்தக் கடனை அடைக்க வாழ்வின் ஒரு பெரும் பகுதி போய் விடும்.

இதுக்கு அடுத்த கட்டமாக எழும் ஆசைதான் கார், வீடு. மேலே சொன்ன அதே தோரணம் தான் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. ஆற்றலுக்கு மீறிய வீடு, ஆடம்பரக் கார் என்று வாழ்க்கை கடனுக்குக் கொள்முதல் செய்வதிலும் கடனை அடைக்க முயற்சிப்பதில் உதைபட்டு நகர்கிறது.

தேவைகளையும் ஆசைகளையும் வேறுபடுத்திக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வில் எது முக்கியமானது என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும். நிதி அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும். வரவு செலவுத் திட்டமிடல் செய்ய வேண்டும். சேமிப்பது என்பது ஒரு பயிற்சி, ஒழுக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு சதமும் எங்கு செல்கிறது என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான பாடங்கள். எம்மில் பலர் மிக மெதுவாகவே படிக்கிறோம்.

Labels:

2கருத்துக்கள்

At 4:48 PM, Blogger யசோதா.பத்மநாதன் said...

நல்லதொரு கருத்து. ஒரு அடிப்படைப் பாடமும் கூட!

‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’- என்று கலங்கிய ஒரு சமூகம் இன்று எப்படி தடுத்தாட்கொள்ளப் பட்டிருக்கிறது பார்த்தீர்களா? :)

நீங்கள் சொன்னது போல தேவைக்கும் ஆசைக்கும் இடையே இருக்கிற வேறுபாட்டை தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்!

 
At 4:24 PM, Blogger நற்கீரன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

 

Post a Comment

<< Home