குடிவரவாளர் அனுபவங்கள் 1 - மோக உணவு
கனடாவிற்கு இலங்கை, இந்தியா போன்ற வசதிகள் குன்றிய நாடுகளில் இருந்து குடிவந்தவர்களுக்கு இங்கு உடனடியாகத் கிட்டும் ஒரு வசதி உணவு ஆகும். குறிப்பாக ஊட்டச்சத்துக்கு குன்றிய உணவுகள். அங்கே கொக்கக்கோலா, ஐசுகீரீம், சிப்சு, சொக்கிலட், பிசுக்கோத்துப் போன்ற பண்டங்கள் விலை உயர்ந்தவை. யாராவது வீட்டுக்கு வந்தால், எதாவது விசேடம் என்றால் அந்த மாதிரி உணவுகளை உண்போம். இளநீர் எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் அங்கு ஒரு பான்ரா குடிப்பது மோகமாக இருந்தது. இங்கே அவை ஒப்பீட்டளவில் மலிந்த விலையில் தொகையாக கிடைக்கும். எனவே புதிதாத வந்தவர்கள் ஆசையாக இவற்றை நிறைய வாங்கி உண்ணுவோம்.
அடுத்தது இங்க இருக்கிற வேக உணவகங்களில அதிகமாக சென்று உண்போம். மக்டோனல்சு, கெ.எப்.சி, பேர்கர் கிங் போன்ற வேக உணவகங்களில் விலை மலிவு. வந்த புதுசில் உணவுகளும் புதுமையாக இருக்கும். எனவே இவற்றையும் நிறைய வாங்கி உண்ணுவோம். ஊரிலை கொக்குத் தடி மாரி இருந்தவை, இஞ்ச வந்து கோயில் கொடிக் கம்ப அடி மாதிரி ஊதுறத்துகு இந்த வழக்கங்கள் ஒரு முக்கிய காரணம்.
இஞ்ச வந்து எங்கட உணவுப் பழக்கங்களிலையும் நிறைய மாற்றாங்கள் ஏற்பட்டு விட்டன. அவித்து சமைத்த உணவு வகைகள் பல பொரித்து சமைத்த உணவுகளாக ஆகிவிட்டன. சோறு பிறைட் ரைசு ஆகி விட்டது. இடியப்பம் இடியப்ப மிக்சு ஆகி விட்டது. மீன், மரக்கறிகள் குறைந்து இறைச்சிப் பயன்பாடு மிகவும் அதிகரித்ததுள்ளது.
சுருக்கமாக, ஊட்டச்சத்தைப் பற்றி கவனம் இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் ஆசை மோகத்தில் எமது உடல்களைக் கெடுத்துக் கொள்கிறோம். உணவு, ஊட்டச்சத்து, சமைத்தல், தோட்டக்கலை பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வது அனைவருக்கும் முக்கியமானது ஆகும்.
Labels: குடிவரவாளர் அனுபவங்கள்
2கருத்துக்கள்
நல்லதொரு பார்வை!
நீங்கள் சொல்லியிருக்கும் இந்த விடயம் மாத்திரமில்லை, நாம் நம் உடலை புரிந்து கொள்வதும் இல்லை. அதன் தேவைகளை அறிந்து கொள்வதும் இல்லை.அதனோடு நாம் நட்பாய் இருப்பதில்லை. இந்த அறிவு நமக்கு அவசியம்.
யோகா போன்ற உடலும் மனமும் சம்பந்தப் பட்ட நம் கருவூலங்கள் பற்றிய தெளிவை நாம் பெற்று பயன் படுத்த ஆரம்பித்தாலே சீனர்களைப் போல ஆரோக்கியமாக வாழலாம்.
இங்குள்ள தமிழ் பாடசாலைகளாவது அவற்றை நம் பிள்ளைகளுக்கு போதிக்க முன் வரவேண்டும்.பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுக்காத மொழிக் கல்வியால் என்ன பயன் சொல்லுங்கள்?
உங்கள் கருத்துக்கு நன்றி. நிச்சியமாக உடற்பயிற்சி, உறக்க, உளவியல் நிலைமைகள் ஆகியவை எமது நலத்தை தீர்மானிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஈழத்தில் உலாவித் திரிந்து வேலை செய்யும் வாழ்க்கை இங்கு வந்து அமந்திர்ந்திருக்கும் வாழ்க்கை முறையாக மாறும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Post a Comment
<< Home