சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தாதீர்கள்
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அறவழியிலான எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கி இருப்பது மிகவும் வரகேற்கத் தக்க ஒன்று. சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்கள், படித்தவர்கள், துணிவானவர்கள், விலைபோகாதவர்கள் கையில் போராட்டம் இருப்பது மிகச் சரியே. சேம்பியனின் கருத்தில் இருக்கும் சிந்தனைச் செறிவு, தெளிவு, தொலைநோக்கு, கொள்கைத் தூய்மை மிகவும் மதிக்கத் தக்கது.
ஆனால் அண்மையில் தொடக்கப் பள்ளி மாணவர்களை வைத்து பெரியவர்கள் நடத்திய ஒர் அணிகுப்பு பற்றிய படங்கள் வெளியாகி இருந்தன. இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்றாகும். ஈழப்பிரச்சினை போன்ற மிகவும் சிக்கலான விடயங்கள் தொடர்பாக சுயமாக சிந்திக்க, முடிவெடுக்க முடியாதவர்களை வைத்து போராட்டம் நடத்துவது ஒரு வகை child abuse தான். ஏன் அக்காமார்கள், அண்ணாமார்கள், பெரியவர்கள் போராடுகிறார்கள் என்பதை விளங்கப் படுத்த முயற்சிக்கலாம், நடந்த விடயங்கள் தொடர்பாக அக்கறைப் பட வைக்கலாம், ஆனால் கோசங்களைக் கூறியவாறு அணிவகுக்க வைப்பது தவறு. உங்கள் சிறுபிள்ளைத் தனத்தைதான் நிரூபிப்பீர்கள்.
குழந்தைகளை/சிறுவர்களை சமயம் சார் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் இது போன்ற ஒரு child abuse என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலே சுட்டியபடி சமயங்கள், இறைமறுப்பு, ஐயுறவியல் போன்றவற்றைப் பற்றி அறிவை வழங்கலாம். ஆனால் இது கடவுள் அது சாத்தான், இதற்கு அடிப்பணி, பூசை செய், வணங்கு என்பது போல செய்வது ஒரு வகை child abuse தான். தயவு செய்து குழந்தைகளை இவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

1கருத்துக்கள்
தவறானப் பார்வை.
சிறுவர், பெண்கள், முதியவர் என ஒட்டுமொத்த இனமும் கொன்றொழிக்கப் பட்டுள்ளது.
அதனை எதிர்த்து ஒட்டுமொத்த இனமும் போராடுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்
Post a Comment
<< Home