தீக்குளிப்புக்களை நிறுத்துவோம்
பிறரின் மரணதண்டனையைத் தடுக்க என தனது உயிரை நீத்துக் கொண்டவரின் முடிவை, முன்னுதாரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரின் உணர்வுகளுடன் எவ்வளவுதான் ஒற்றிப் போனாலும், அவரின் முடிவை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. போராட்ட சூழல், அவர் வாழ்ந்து சாதித்து இருக்க கூடிய விடயங்கள், அவரது குடும்பம் அனுபவிக்கும் இழப்பு, அவர் ஏற்படுத்திக் கொடுக்கும் பிழையான முன் உதாரணம் எனப் பல காரணங்களால் அவரின் முடிவு தவறானது.
எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் மிகவும் தீவரவமான வடிவங்களில் ஒன்று தீக்குளிப்பு. உண்ணாநிலை வடிவத்தின் உச்ச வகை எனலாம். பிறர் சிலர் கூறுவது போல இதை வெறும் வன்முறையாக கருதமுடியாது. தன்னை தனே வருத்தி, தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுவது அறநிலைப் போராட்ட வடிவமாகவே நாம் கருதமுடியும். ஆனாலும், மிக மிக கடைசி வழிமுறையாகவே இது பயன்படுத்தப்பட வேண்டும். மிக மிக சில தருணங்களிலேயே இதை நியாயப்படுத்தலாம்.
2கருத்துக்கள்
தீக்குளித்தவரை விட அவருக்கு தியாகி போராளி என்றெல்லாம் பட்டம் சூட்டி இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த தரங்கெட்ட அரசியல்வாதிகளை என்னவென்பது? தற்கொலை வீரச்செயல் என்றால் அவர்கள் இந்த தியாகத்தை செய்யலாமே!
நற்கீரனாரே நல்ல பதிவு! ஒரு ஒட்டு இதோ!தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-
Post a Comment
<< Home