<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, May 22, 2011

தமிழா...தமிழா...நீ ஒரு வரலாறு - வல்வை வரலாற்று ஆவணக்காப்பக நிகழ்வு

தமிழரிடம் தமது அறிவையோ வரலாற்றையோ பதிவு செய்துப் பகிரும் மரபு அரிது. எதிரிகள் ஒரு புறம் எம்மை அழிக்க, மறுபுறம் எமது அக்கறையின்மையாலும், முறைமை இன்மையாலும், தன்னலத்தாலும் எமது அறிவையும் வரலாற்றையும் நாமே அழியவிட்டோம். பெரும் கப்பல்கள், கோயில்கள், நீர்பாசன முறைகள், உலோகக் கலைகள் என்று ஒரு அறிவியல் புரட்சியையே தம்மிடம் வைத்திருந்த ஒரு இனம் அதில் எதையுமே பதிவு செய்யாமல் விட்ட சோகத்தை யாரிடம் போய் கூறுவது. எமது நாடு எமதே என்று வாதிடக் கூட தகுந்த ஆதாராங்கள் வைக்காமல் போய்விட்ட குறையை யாரிடம் போய் கூறுவது. இப்போது மட்டும் பெளத்தமயமாக்கம், சிங்களமயமாக்கம், படைத்துறைமயமாக்கம், வணிகமயமாக்கம் என்று கதறினால் போதுமா?

இதுவே பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்தின் போக்காக இருந்தாலும், ஆங்காங்கே சில அறிஞர்களும் அமைப்புக்களும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே வருகிறார்கள். 10 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்ட திருமுறைகள், 19 ம் நூற்றாண்டில் பதியப்பட்ட தமிழ் இலக்கியத்ங்கள், பதியப்பட்டு வரும் நாட்ட்புறவியல் படைப்புக்கள், 1960 களில் எழுதப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் என்று தமிழ்ச் சமூகத்தின் உயிர்ப்பை சிலரே பேணி வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் ந. நகுலசிகாமணி. அவரினதும், அவருடைய மனைவினதும் அயராத உழைப்பால் உருப்பெற்று இருப்பதுதான் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம். ஈழத் தமிழர்களின் பல பழைய நூல்களை தேடிப் பாதுகாப்பதுடன், அவற்றை மீள்பதிப்புச் செய்யும் பணியிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். வரலாற்றுக் கண்காட்சிகளையும் ஒழுங்கமைப்புச் செய்து வருகிறார். இவர்களின் நூற் கண்காட்சியும் கருத்தரங்கமும் கவியரங்கமும் நாளை நடைபெறுகிறது. இது Peter & Paul Banquet Hall இல் முப 10:00 இருந்து பிப 9:00 நடைபெறுகிறது. அரங்க கட்டணத்தையும் தாமே ஏற்று இதை நடத்துகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்வோம்.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home