<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Saturday, December 11, 2010

எம்மைக் கொன்றது போதாதா?

நாம்தானே செத்துப்போனோம்.
எம்மை வதைத்து, வன்புணர்ந்து
கொன்றது போதாதா?
செத்த உடல்களை
சிதைப்பதில்
நிர்வாணமாக்குவதில்
ஊர்வலம் எடுப்பதில் இருக்கும்
உங்களின் உணர்வுகள் தான் என்ன.

நாம்தானே செத்துப்போனோம்.
எம் புதைக்குழிகளைத் தோண்டி எடுத்து
உடைப்பதில்
கலைப்பதில் இருக்கும்
உங்களின் உணர்வுகள் தான் என்ன.

நாம்தானே செத்துப்போனோம்.
அவமானத்தையும்
அடக்குமுறையையும்
அடிமைத்தனத்தையும்
எமக்குத் தருவதில் இருக்கும்
உங்களின் உணர்வுகள் தான் என்ன.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home