<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, April 09, 2006

தங்கக் கன்று

பைபிள் தொன்மவியல் கதைகளில் தங்கக் கன்று (Golden Calf) உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து ஒரு முக்கிய கதை இருக்கின்றது. இஸ்ரேலிஸ் (இஸ்ரேல் மக்கள்) அடிமை வாழ்வை விட்டு எகிப்த்திலிருந்து வெளியேறி அவர்களுடைய நீண்ட யெரூசலம் நோக்கிய பயணப் பாதையில், சினைய் மலையடிவாரத்தில் இக்கதை நிகழ்கின்றது. கதையின் படி மோசஸ் இறைவனிடம் இருந்து 10 கட்டளை பெற சினைய் மலை உச்சி நோக்கி பயணித்து இருந்தார். பல நாட்கள் சென்றும் மோசஸ் திரும்பாததை கண்ட இஸ்ரேலியர்கள், அரோனிடம் தமக்கு கடவுள்கள் உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணைந்த அரோன், அவர்களிடம் இருந்த தங்கத்தை பெற்று உருக்கி ஒரு தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேலியர்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள்.


ஆத்திரம் கொண்ட இறைவன் இஸ்ரேலியர்கள் தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசஸ்டம் சொன்னார். மோசஸ் அவர்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசஸ் 10 கட்டளைளோடு சினைய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரேலியர்களின் ஒழுக்கமீறல்களை கண்டார், கோபம் கொண்டார். கோபத்தில் 10 கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை போட்டு எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லெவியின் மகன்களை கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார். அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரேலியர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசஸ் இறைவனிடம் தன்னை தண்டிக்கும்படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களை தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசஸ்ஸை மீன்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் 10 கட்டளைகளை அளித்தார்.

தங்கக் கன்று - தமிழ் விக்கிபீடியா

3கருத்துக்கள்

At 2:02 AM, Blogger வஜ்ரா said...

Do not mistake me, it seems that the Hebrew God is very jealous about his followers. He seems to command as if his followers are his servents that they should take command from only Him.

In a way it generates a contradiction. He says that He is the only God and no other God exist. Then when people worship a Calf, He punishes them as if a master would punish his servent for not obeyhing him and obeying some body else.

It implies that he acknowledges the presence of other Gods and he does not want his chosen people to worship any others other than Him.

I have been reading the hebrew bible (Old testement-Torah). This question does not seem to have answers there.

When you read thruvaasagam its completely different, it says 'ஏதிலர்க்கு கேதில் இறைவன்'
Even if one does not worship Him. He does not harm them.

sankar.

 
At 2:16 AM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 2:19 AM, Blogger நற்கீரன் said...

I am not familiar with many elements of Judeo – Christian myths. But, their conception of God is certainly different from that of Hindu concept, in that they perceive God as separate form His (yes, His there is no Her) creations.

One of the main themes of Judeo – Christian belief system is obedience to God. Although, there seems to be One God, Judeo – Christian mythology does allow for lesser Gods or Angels. The God also allows for Free Will. So, there is a paradox. A God who gives his creations the Free Will, yet expects obedience or trust in Him.

 

Post a Comment

<< Home