<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, August 09, 2005

10 கட்டற்ற மூலங்கள்

கடந்த வாரம் ஆங்கில ஐரோப்பிய விக்கிபீடியாக்களின் வளர்ச்சியை கொண்டாடுவதற்க்கும், எதிர்கால திட்டங்களை அலசுவதற்க்கும் என முதன்முதலாக விக்கிமேனியா சங்கமம் யேர்மனியில் இடம்பெற்றது. அப்பொழுது விக்கிபீடியாவின் முன்னோடிகளின் ஒருவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) அவர்கள் 10 கட்டற்ற மூலங்கள்களா பரிமானிக்க இருக்கும் உடமைகள் பற்றி அறிவித்து அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். அவ் 10 கட்டற்ற மூலங்கள் பின்வருவன:

1. கட்டற்ற கலைக்களஞ்சியம் (wikipedia.org, ta.wikipedia.org)
2. கட்டற்ற அகராதி (ta.wiktionary.org)
3. கட்டற்ற பாடத்திட்டங்கள் (MIT OCW, Japan Open Course Ware Allaince)
4. கட்டற்ற இசை
5. கட்டற்ற ஒவியம்
6. கட்டற்ற கோவை நியமங்கள்
7. கட்டற்ற புவியியல் வரைபடங்கள்
8. கட்டற்ற பொருள் அடையாள பட்டைகள்
9. கட்டற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்கள்
10. கட்டற்ற குமுகாயங்கள் (thzmizmaNam)

இவைதவிர மேலும் 13 பற்றி பின்னர் தெரிவப்பதாக இருக்கின்றது. உணவு, உடை, உறையுள் தேவைகளை பூர்தி செய்துள்ள வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் மக்கள் சிந்தனையில் இவை எழுந்தன என்றால், இந்தியா, இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் குடிமக்களான நாம் எவற்றை கட்டற்றதாக மாற்றுவோம்.

1. மாசு இல்லாத காற்று
2. கட்டற்ற தண்ணீர்
3. பசியை போக்க உணவு
4. இருக்க படுக்க விதைக்க நிலம், வீடு
5. நோயை போக்க மருந்து
6. அறியாமை போக்க கல்வி
7. கட்டற்ற காடு/இயற்கை
8. கட்டற்ற கடல்
9. எழுத,பேச, வெளிப்படுத்த சுதந்திரம்
10. வன்முறை இல்லாமல் மறுந்துரைக்க, விமர்சிக்க, முறைப்படி எதிர்க்க சுதந்திரம்
11. வன்முறை இல்லாமல் கூட்டம் கூட, செயல்பட சுதந்திரம்
12. சாதி, மத, பெண்ணடிமை மடமை கட்டுபாடுகளில் இருந்து விடுதலை

இப்படியொரு சூழலை, குமுகாயத்தை எம்மால் கட்ட முடியுமா, அல்லது இது வெறும் கோசலக் கனவுதானா?

2கருத்துக்கள்

At 9:18 AM, Blogger மு. மயூரன் said...

தளையறு மென்பொருள் இயக்கத்தாரும், அவர்கள் கோட்பாட்டின் கிளை திட்டங்களை கொண்டுநடத்துவோரும் பெரும்பாலும் நீங்கள் சொன்னதைப்போல மேற்கையே தளமாக கொள்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சொல்ல அஞ்சும், அல்லது சொல்லப்பிரியப்படாதளவு, முதலாளிய பீடிப்புக்குள்ளான நிலையில், முரண்பட்டு தடுமாறும் முக்கியமான தொடர்புறுத்தல் ஒன்றினை சுருக்கென தொடுகிறீர்கள்.

றிச்சட் ஸ்டால்மன் போன்றவர்கள் கூட "சைபர் கம்யூனிசம்" என்ற வார்த்தைக்கு தடுமாறி, மழுப்பலாகவே கருத்து சொல்கின்றனர்.

தளையற்ற நிலையில் "எல்லாம்" கிடைக்கவேண்டுமானால், தளையறுப்பு செய்யவேண்டும்.

நாம் போராடும் இனம்.
போராட்ட சூழலில் வாழும் தலைமுறை.

நமது போராட்டங்களையும், தளையறுப்புக்கான போராட்டமாக நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு வாய்ந்த தலைமுறை.

எம்மால் இதனை செய்ய முடியுமா?

 
At 10:39 AM, Blogger நற்கீரன் said...

மயூரன் கருத்துக்களுக்கு நன்றி.

நாம் எல்லோரும் எம்முள் முரண்பாடுகளை கொண்டவர்களே. நீங்கள் நிஜ வாழ்வின் நிர்பந்தங்களை மேலும் புரிந்து கொள்ளும் பொழுது உங்கள் கருத்துமுதலியத்துவத்துக்கும் யாதார்த்தக்கும் இருக்கும் இடைவெளியை நன்கு புரிவீர்கள். ஏன் ஈழ போரட்டாமே இலட்ச்சியத்துக்கும் யதார்த்தக்கும் இருக்கும் இடைவெளியை நன்கு புரிய வைத்திருக்கும். அதே போல் திறந்த சந்தை வாழ்க்கை முறையை நீங்கள் சற்று அவசரப்பட்டு வில்லனாக்கி விட்டீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

பல நிலைகளில், பல சுழல்களில், பல விளைவுகளை ஆய்ந்து பதிலளிக்க வேண்டிய கேள்வி. தற்சமயம் எமக்கு கட்டற்ற அல்லது திறந்த அல்லது தளையற்ற மூலங்களே மூலமாக இருக்கின்றது. அதை திறமையுடன் பாவித்து கொள்ளுதல் வேண்டும். தளையறுக்கப்பட்ட மூலங்கள் எமக்கு தேவை ஏற்பட்டால் அதை எப்படி பெற்றுகொள்ளுதல், அல்லது உருவாக்கிகொள்ளுதல் பற்றி அப்பொழுதே சிந்திக்க வேண்டும்.

 

Post a Comment

<< Home