<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Tuesday, July 26, 2005

தமிழ்ச்சொற் தேடல்கள்

"சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மையறிந்து" - திருக்குறள்

"சம அர்தமுள்ள எல்லா வார்த்தைகளும் நம் முன்னாலே வந்து அணிவகுத்து நிற்க வேன்டும். கருத்து முழுவதையும் நினைத்தை நினைத்தபடி சொல்ல ஏலாத வார்த்தைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். மிஞ்சுகிற வார்த்தைகளில் ஒன்றையொன்று போரிடச் செய்து, எது எல்லா வார்த்தைகளையும் வென்று ஜெயம் பெறுகிறதோ, அந்த வார்த்தையைத் தான் சொல்ல வேண்டும்."

(குறளும் விளக்கமும்: நூல்: பாராட்டு தமிழ், கட்டுரை: "சொல் வழிபாடு" - எஸ். மகராஜன்)

தமிழில் வலை பதியும் யாவரும் தமிழில் சொற்கள் தேடுவது வழமை. தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்க்கு சொற்கள் அரிது என்றே இன்னும் பலர் கூறுகின்றனர். ஆனால், சற்று தேடினால் அனைத்து துறைகளிலும் நல்ல தமிழ் சொற்களை அறிந்துகொள்ளலாம்.

முதலில் நல்ல அகராதி வைத்திருப்பது உதவும். ப. அருளியார் தொகுத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட "தமிழில் அருங்கலைச்சொல் அகராதி"யை இராம்கி அவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். (இவ் அகராதி கனடாவில் எங்கு கிடைக்கும் என்றோ, அல்லது இணையத்தின் மூலம் எப்படி பெறலாம் என்றோ தெரியவில்லை. தெரிந்தால் தெரியப்படுத்தவும்.) லிப்கோவின் ஆங்கில-ஆங்கில-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கில பொதுஅகராதிகளும் நன்று, பரவலாக கிடைக்கின்றன.

அகராதியை புரட்டுவதிலும் கணனியில் தேடுவது சுலபம். அவ் ரீதியில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட தமிழ் மென்பொருள் திரட்டில் உள்ள பழனியப்பா சகோதரர்களின் பால்ஸ் இ-அகராதி இலவசமாக இணையத்தில் இங்கு (http://www.ildc.in/GIST/htm/dictionary.htm) கிடைக்கின்றது. அதை தரையிறக்கம் செய்து பாவிக்கலாம். நல்ல தேடல் வசதி உண்டு.

இணையத்தில் இருக்கும் உபயோகமான ஆனால் மட்டுபடுத்தப்பட்ட ஒரு கலைச்சொல் அகராதி இங்கே(http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp). இலகுவாக சொற்களை தேடலமாம். பல நுட்பியல் சொற்களை கொண்டிருக்கின்றது, ஆனால் பொதுவான சொற்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. நீங்களும் இதில் சொற்களை சேர்கலாம், அல்லது பரிந்துரைக்கலாம். யார் இதை பராமரிக்கின்றார்கள், இன்னும் பராமரிக்கப்பட்டு விரிவு படுத்தப்படுகின்றதா என தெரியவில்லை.

தமிழ் கலைச் சொல் திரட்டலில், வகுத்தலில் ஒரு மைக்கல்லாக அமையப்போவது தமிழ் விக்சனரிதான் http://ta.wiktionary.org/wiki/. மிக இலகுவாக சொற்களை திரட்ட, வகுக்க, தேடக்கூடியவாறு அமையப்பட்ட தளம். யாரும் இச் செயற்பாட்டில் பங்குகொள்ளலாம். பின்னிணைப்புக்கள் என்று பல பட்டியல்கள் திரட்டப்படுகின்றன. சொற் பட்டியல்கள் தகவல்களை ஒழுங்கமைப்பதில் ஒரு அடிப்படை முறை. தமிழில் பல தரப்பட்ட தகவல்களை சுலபமாக திரட்ட இப் பட்டியல்கள் உதவும்.

மிகவும் விரிவான, பல உத்தியோகபூர்வ கலைச்சொல் திரட்டல்களின் இணைய திரட்டாக அமைவது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் கோவைகள்தான் (சுட்டி: http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm).

இலத்திரணியல், இலக்கமியல், மின்னியல் போன்ற நுட்பியல் துறைசார் கலைச்சொற்களை தொழில்நுட்பம்.காம் திரட்டி தருகின்றது (சுட்டி: http://www.thozhilnutpam.com/).

நீண்ட நாட்களாக வலையில் இருந்த தற்சமயம் இணையத்தில் இல்லாத விரிவான கணனியில் கலைசொல் பட்டியல் கொண்ட்ட வலைத்தளம் http://www.tcwords.com/ஆகும்.

மைக்ரோசொப்ற் சேகரித்த தமிழ் கலைச்சொல் பட்டியலை இங்கு http://members.microsoft.com/wincg/home.aspx?langid=1097 நீங்கள் அங்கத்துவர் ஆகி பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றை எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றால் இராம்கி, வெங்கட் போன்ற ஆழ்ந்த தமிழ் சொல்வளம் அறிந்தவர்களுக்கு மின்ன்ஞ்சல் செய்து முயற்ச்சிக்கலாம்.

இவற்றை விடவும் பல தமிழ் கலைச்சொல் பட்டியல்கள், திரட்டல்கள் இணையத்தில் இருக்கலாம். தெரியபடுத்தினால் நன்று.

15கருத்துக்கள்

At 4:15 PM, Blogger சினேகிதி said...

tx 4 the useful info nakiran

 
At 7:56 PM, Blogger Thangamani said...

பயனுள்ள சுட்டிகள். நன்றி!

 
At 11:59 PM, Blogger சுதர்சன் said...

மிகவும் பயனுள்ள சுட்டிகள். நன்றி!

 
At 12:37 AM, Blogger வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு.
பயனுள்ள சுட்டிகள்.
அவர் இராம்கி இல்லை. இராம.கி. என்று வரவேணும்.

 
At 2:55 AM, Blogger அன்பு said...

மிக மிக பயனுள்ள தகவல்களை ஒருங்கிணைத்துள்ளீர்கள். பாராட்டத்தக்க முயற்சி, நன்றி

 
At 6:52 AM, Blogger பரி (Pari) said...

ஜெர்மனியில் இருக்கும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ் அகராதி இங்கே
இதற்கான தமிழ் இடைமுகம் இங்கே

 
At 7:05 AM, Blogger டிசே தமிழன் said...

பயனுள்ள பதிவு. நன்றி நற்கீரன்.

 
At 11:18 PM, Blogger maalan said...

>>அதை தரையிறக்கம் செய்து பாவிக்கலாம்.<<
தரவிறக்கம் செய்து பாவிக்கலாம். தரவு= data

 
At 9:28 AM, Blogger நற்கீரன் said...

சினேகிதி, தங்கமணி, சுதர்சன், வசந்தன், அன்பு, பரி, டிசே தமிழன், மாலன் ஆகியோரின் கருத்துக்களுக்கும், சுட்டிகளுக்கும், திருத்தங்களுக்கும் நன்றி.

 
At 12:24 PM, Blogger நற்கீரன் said...

A comprehensive Tamil and English dictionary of high and low Tamil

(Unicode Based)

http://dsal.uchicago.edu/dictionaries/winslow/

 
At 12:33 PM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 3:08 PM, Blogger இராம. வயிரவன் said...

பயனுள்ள ஆய்வு. 'camp' என்பதற்கான தமிழ்ச் சொல்லைத் தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி!

 
At 9:50 AM, Blogger SK said...

//'camp' என்பதற்கான தமிழ்ச் சொல்லைத் தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி!//"முகாம்" எனச் சொல்லலாமே!

 
At 6:14 PM, Blogger Hazmisaan said...

THANK YOU,FOR YOUR COMMENT,I NEVER FORGET WIKIPEDIA.

 
At 6:16 PM, Blogger Hazmisaan said...

WIKI IS THE GREAT.

 

Post a Comment

<< Home