அடித்தளம் தேடும் ஈழ சட்டங்கள்
ஒரு நாட்டின் அதி உயர் சட்டம் அதன் கட்டமைச்சட்டம் (constitution) ஆகும். எப்படி, யார் சட்டங்களை உருவாக்கலாம், மக்களின் உரிமைகள் கடமைகள் எவை என கட்டமைச்சட்டமே வெளிப்படுத்தும். பொதுவாக கட்டமைச்சட்டம் ஒரு நாட்டுக்குரியது, மற்ற நாடுகள் அந் நாட்டை அங்கீகரிக்கும் பொழுத்தான் இச் சட்டங்கள் வலு பொறுகின்றன.
ஈழம் ஒரு அங்கீகரிக்கரிக்கப்பட்ட நாடு இல்லை. ஈழத்திற்க்கு கட்டமைச்சட்டம் இன்னும் இல்லை. இந்நிலையில் வன்னியில் இயங்கும் சட்டமைப்புக்கு அடித்தளம் யாது?
யார் சட்டத்தை உருவாக்குகின்றார்கள்? புலிகள். எப்படி உருவாக்குகின்றார்கள்? அவர்களுக்கு எது நீதியாக தென்படுகின்றதோ அதுவே சட்டம்.
இது சட்டத்தில் மிக அடிப்படை கூறான பட்ச பாதமில்லாத தன்மையை (impartiality) கேள்வி குறியாக்குகின்றது. மேலும், கட்டமைச்சட்டம் போன்ற ஒரு அடிப்படை சாசனம் மூலம் மக்களின் உரிமைகளும், கடமைகளும், சட்ட உருவாக்க முறைகளும் தெளிவுறுத்தப்படாத நிலை, எந்த ஒரு சட்டத்தின் கேள்விக்குட்படுத்தும், மாற்றியமைகும் முறைகளை மறைத்து வைக்கின்றது. இச் சூழல் சட்டத்தை உருவாக்குபவர்கள் சட்டத்திற்க்கு வெளியே தொடர்ந்து செயல்படுவதற்க்கு உதவுகின்றது.
போர் - சமாதானம் என இரண்டிற்க்கும் இடையில் இருக்கும் ஈழத்தின் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இதை கருத முடியும். இக் குறைபாடுகள் நோக்கி ஈழ சட்ட பொறுப்பாளர் பாராஜசிங்கம் கூறுகையில், சட்ட முறைகள் கோட்பாடுகள் தொடர்ந்து பரிமாணித்து கொண்டிருக்கின்றன, நாளடைவில் தங்கள் சட்டமுறைகள் சர்வதேச தரத்திற்க்கு கொண்டுவரப்படும் என்றார். (ஆதாரம்: TamilNet: "Thamil Eelam judiciary said a basis for rebuilding northeast")
மேலும், ஈழ அரசியல் கட்டமைப்புக்கள் தெளிவு பெற்று அங்கீகரிக்கப்பட்டால்தான் ஈழ சட்டங்கள் சட்டங்கள் ஆகும். அது வரைக்கும், ஈழ சட்டங்கள் புலிகளின் சட்டங்களே.
4கருத்துக்கள்
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது குழப்பமாக உள்ளது.எனக்கு புரிந்த வகையில் வெளிநாடுகள் புலிகளையும் ஈழக்கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சட்டங்கள் சர்வதேசத் தரத்துக்கு மாற்றியமைக்கப்படும் அதற்காகவாவது பிறநாடுகள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என்று கூறவருகிறீர்கள் என நினைக்கிறேன்.
அப்படியில்லை புலிகளின் சட்டங்கள் அவர்களாலே மட்டும் தீர்மானிக்கப்படுபவை அதனால் அவை சரியென ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதம் புரிந்தால்.
சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சவூதி சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இன்னமும் மரண தண்டனை உண்டு அந்த நாட்டைப் பொறுத்தவரையில் அது சட்டம்.மற்ற நாடுகளைப் பொறுத்த வரையில் அது காட்டுமிராண்டித் தனம்.ஆக சட்டங்கள் கனடாவுக்கும் தமிழீழத்துக்கும் பொதுவாக இருப்பதில்லை.இலங்கையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்தக் கட்சிக்கு இருக்கிறதோ அந்தக் கட்சி வைத்ததுதான் சட்ட்டம் இரவோடிரவாக தமிழர்களைத் துரத்துக என்று சட்டமியற்றினால் அதுவும் சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் சட்டம்தான்.
பாகிஸ்தானில் முஷாரப் வைத்ததுதான் சட்டம் உலக நாடுகள் பாகிஸ்தானை விலக்கியா வைத்திருக்கின்றன?
இந்தச் சட்டங்கள் எதன்பாலுருவாகின்றன?
சட்டத்துக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் என்ன தொடர்பு?
இதை யாரது நலன் உந்தித் தள்ளி மக்களை இவற்றுக்குப்பணியத்தூண்டுகிறது?
ஒழுங்கமைந்த சமுதாயத்தின்மீதான சட்டவாக்கம் எதைக் குறித்துரைக்கிறது?
இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியநாடுகளுக்குப்பொதுவான அரசியற் சட்டவாக்கம் மனிதவுரிமைகளுக்கெதிரானதென சமூகநலச் சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டு எதிர்க்கப் படுகிறது.
அப்போ சட்டங்களின் தேவைதாம் என்ன?
பொருளாதாரம் என்பது எப்பவுமே மனித சமுதாயத்தின் அடிப்படையான-அத்திவாரமான அடிமட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பைக் காத்துக் கொள்ளும் மேல் மட்ட அமைப்புகளாகக் 'கருத்தியல் அமைப்பாக' இந்தச் சட்டங்கள்,நீதிமன்றங்கள்-சிறைச்சாலைகள்,மதவாதங்கள்,கல்விக்கொள்கைகள்,ஊடகதர்மங்கள்-பரப்புரைகள்,நாடாளுமன்றங்கள் இருக்கின்றன.இவற்றால் அந்த அடிமட்ட அமைப்பைக் காத்துக் கொள்ள முடியாதபோது வன்முறைசார்ந்த'வன்முறைஜந்திரம்' வந்துவிடும்.இது பொலிஸ்,இராணுவமாகவும் இன்பிற அடியாட்படையுமாக இருக்கிறது.
இங்கே புலிகளின் சட்டதிட்டங்களும் இதற்கு விதிவிலக்காக முடியாது.எனவே இதைக்குறித்துக் கருத்தாடுவதற்குப் பதிலாக இத்தகைய பொருளாதாரப் பொறிமுறையை மாற்றியமைக்க முனைதலே சாலச்சிறந்தது.அப்போது இந்த வடிவங்கள் யாவும் நூதனச்சாலைநோக்கி நகரும்.
ஈழநாதன்:
புலிகளின் சட்ட கட்டமைப்பில் பல தெளிவின்மைகள் இருக்கின்றன. ஒரு தற்காலிக சாசனம் மூலம் அவர்கள் தங்களது சட்டமுறைகளை தெளிவுபடுத்தலாம்.
புலிகளோ அவர்களின் கட்டமைப்புக்களோ அங்கீகரிக்கப்படாத நிலையில், அவர்களின் சட்டமைப்புக்கள் வலு குறுகியதே.
சட்டமைப்புக்களை மக்கள்தான் ஏற்படுத்திகொள்கின்றார்கள். சட்டங்களை உருவாக்குவதற்க்கும், மாற்றுவதற்க்கும், எதிர்ப்பதற்க்கும் நாம் வன்முறையற்ற வழிமுறைகளை ஏற்படுத்திகொள்ளவேண்டு. இம் வழிமுறைகள் அற்ற அல்ல தேடும் நாடுகளாகத்தான் இலங்கையையும் பாகிஸ்தானையும் நாம் பார்க்கமுடியும். இந்நாடுகளின் பிளைகளையே நாங்களும் செய்வோமானால் நமது குமுகாயம் வன்முறையில் இருந்து என்றும் மீளமுடியாது போய்விடும்.
சர்வதேச தரம் என்னும் பொழுது ஐ.நா. மனித உரிமைகள் போன்ற சாசனங்களையும், சட்டமுறைகளையும்தான் குறிப்பிட முனைகின்றேன்.
சிறி ரங்கன்
நீங்கள் தேடும் மாற்றங்களும், நான் பதிய முயன்ற தேடல்களும் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன. நீங்கள் சட்டங்களை பொருளாதார அமைப்பின் ஒரு கூறாக பார்த்து அடிப்படை மாற்றங்களை தேடுகின்றீர்கள். திறந்த பொருளாதார கொள்கைகளில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதற்க்கு மாற்றான, நடைமுறையில் இருக்கும் ஒரு பொருளாதார கொள்கை இல்லை என்றே நினைக்கின்றேன். எனினும், மாற்று பொருளாதார முறைகள், வாழ்வு முறைகள், கட்டமைப்புக்கள் முடியும் என்றே நினைக்கின்றேன்.
'தமிழீழச் சட்டங்கள்' இலங்கைக் குடியரசின் தேச வழமைச் சட்டத்தை அடியொற்றியது. ஏராளமான விதயங்கள் இன்னும் மாறாமலேயே பின்பற்றப்படுவன.
தெளிவின்மைகள் இருக்கின்றன எனும் நீங்கள் அவற்றைச் சொல்லலாமே. ஆகக்குறைந்தது ஓரிரு வழக்குகளையென்றாலும் குறிப்பிட்டு அவற்றில் உங்களுக்கு என்ன பிரச்சினையென்றாவது சொல்லலாம். அது ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் வழிவகுக்கும். அதைவிட்டு 'சில தெளிவின்மைகள்' இருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லிவிட்டால் எப்படி?
பலரும் ஏதோ காட்டுமிராண்டிகளின் சட்டம்போல் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் என்ன பிரச்சினையென்பதையாவது சொல்வதில்லை.
Post a Comment
<< Home