<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, February 02, 2005

குழந்தைகள் குத்தகைக்கு

(எவ்வளவுதான் மனதை பாதித்தாலும், பத்ரியின் பதிவை-"தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு" செய்தி என்ற அடிப்படையில் புரிந்துவிட்டு.., அடுத்த வாசிப்பு. உலகில் இப்படி பல செய்திகள். இவை பற்றி கவனிக்கவும் பல அமைப்புக்கள் உண்டு. (?)...எனினும்)

பள்ளி சென்று வந்து கைத்தொழில். பெற்றோரின் தோட்டத்தில், தொழிலில் உதவி. சனி, ஞாயிற்று கிழமைகளில் வேலை. தப்பில்லை.

ஆனால், 9 வயது, 11 வயது குழந்தைகள் குத்தகைக்கு, விற்பனைக்கு. எதற்கு?
வீட்டு வேல்க்காரர்கள்.
பணியாளர்கள்.
சிறுவர் போராளிகள்.
உடலுறவு தொழிலாளிகள்

யார் அந்த பெற்றோர்கள்? அவர்களுக்கு ஏன் குழந்தைகள்?

சமூகமே, நாம் எப்படி இதை அனுமதிக்கலாம்?

கொத்தடிமைகள், வீட்டடிமைகள், அடிமைகள். இச் சாதிகள் தமிழரிடையே உண்டு.

அடியடியாக வேலைபார்க்கும் "அடிமை" சாதிகள்.
உன் பிள்ளை பார்க்க வேறொரு சிறுமி/சிறுவன் வேலைக்கு வைக்கும் "மேற்குடி" சாதிகள்.

அமெரிக்க வந்த இந்தியர் சொன்னார், உரிலை எண்டா நாலு ஐந்து வேலைக்காரர்களை (சிறுவர்களை) வச்சு சுமாரா இருக்கலாம், இங்க சம்பளம் அதற்கெல்லாம் போதுதிலை என்று.

இலங்கையில வீட்டமைகள் வைத்துருந்தோர், வெளிநாடு வந்து தங்கள் மேற்குடி தனத்தைப்பற்றி கதைக்கும் பொழுது தெரியும், தமிழரிடையே இருக்கும் சாதிகள் பற்றி.

குழந்தைகள் குத்தகைக்கு விடப்படுவது, சமூக பொருளாதார கட்டமைப்பில் இருக்கும் ஒரு நோய்.

வறுமை, அறியாமை கூட்டின் விளைவு.

மனிதத்தின் குறை.

ஒவொரு குழந்தையும், மனிதனும் சுதந்திரமானது. குழந்தை தன்நிலை அறியும் வரை, தன்னை நிலை நிறுத்தும் வரை பெற்றோரின் அல்லது சமூகத்தின் ஆதரவில் சுதந்திரமாய் பராமரிக்கப்படவேண்டும்.

இதை செய்ய தவறும் பெற்றோர்கள், சமூகம் கொடூர தப்பிளைக்கின்றார்கள். இவர்கள் மேற்குடிகள் அடிமைகள் என்ற கட்டமைப்பை மீண்டும் மீண்டும் பிறப்பிக்கின்றார்கள்.

மீட்ச்சி உண்டா?

1கருத்துக்கள்

At 5:33 AM, Blogger வீ. எம் said...

இந்தியாவை பொறுத்தவரை மக்களாட்ச்சி, கட்டமைச்சட்டம் போன்றவை சமத்துவத்தை பேணுகின்றன. ஆனால், சாதி அமைப்பு சமத்துவத்துக்கு எதிரான மிவவும் கொடிய கட்டமைப்பாக செயல்படுகின்றது.

===
well said narkeeran.. nicely written
====
v.m

 

Post a Comment

<< Home