<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, January 28, 2005

பரிசோதனை சமூகங்கள்

தனி குடும்ப நகர வாழ்வே மேற்க்கு நாடுகளில் வழமை. இங்கு அடிப்படை வசதிகள், உரிமைகள், தொழில்நுட்ப மேலான்மை, பொழுது போக்குக்கள் பல இருந்தும் சிலர் தமது வாழ்வு முறைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றனர். இவ் வாழ்வு முறையின் வெளிப்பாடுகள் ஆன நுகர்வு கலாச்சாரம், வேலைப் பளு, விரக்தி, சூழல் சீர்கேடு, சமூக தொடர்பு இழப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றனர். இவ் உந்துதல்களால் அவர்கள் மாற்று வாழ்வு முறைகளை தேடிகின்றனர். மேலும் சிலர் சாரசரி சமூக கடமைப்புக்களை தாண்டி புதிய அல்லது மாற்று அடிப்படைகளில் வாழ்வு முறைகளை தேடுகின்றார்கள். இப்படிப்பட்ட பரிசோதனை சமூகங்களை பற்றிய தகவல்களுக்கு:

http://www.ic.org/ (Intentional Communities)
http://directory.ic.org/iclist/ (A Comprehensive List)
http://www.thefec.org/ (The Federation of Egalitarian Communities)
http://www.planetfriendly.net/
http://www.augustana.ca/rdx/eng/activism/comun_eng.htm (List of ICs based in Canada)
http://www.diggersanddreamers.org.uk/default.htm (ICs in Britain)
http://dir.yahoo.com/Society_and_Culture/Cultures_and_Groups/Intentional_Communities/

http://www.twinoaks.org/ (Walden Two inspired)
http://www.thefarm.org/ (Among the most successful)
http://www.abundantdawn.org/index.html
http://economads.com/index.php (A Couple in a Journey)

இந்தியாவில் காந்தியின் ஆச்சிரமங்கள் (http://www.mkgandhi.org/sevagram/default.htm), அயுரோவில் ஆச்சிரமம் (http://www.auroville.org/index.htm)ஆகியவற்றை பரிசோதனை சமூகங்களாக குறிப்பிடலாம். தமிழர்கள் மத்தியில் ஆச்சிரமங்கள், மடங்கள், சமத்துவபுரங்கள் இருந்தாலும் சுயாதீனமாக தத்துவ ரீதியில் தம்மை பரிசோதனை சமுகங்களாக அடையாளப்படுத்தும் எவ் குழுமத்தை பற்றியும் நான் கேள்வி படவில்லை.

ஒவொரு காலகட்டத்திலும் இப்படியான சராசரி சமூகத்தின் வாழ்வு முறைகளை விட்டு, புதிய அல்லது மேன்பட்ட அல்லது மாறுபட்ட வாழ்வு முறைகளை அமைக்க பரிசோனை சமுகங்கள் முற்பட்டுள்ளன. பல படு தோல்விகளாகவும், சில நல்ல படிப்பினைகளை தருவனவாகவும், சில நல்ல உதாரணங்களாகவும் திகழ்கின்றன. சம உரிமை, மனிதம், இயற்கை, இறை என பேச்சில் மட்டும் நின்று விடாது, வாழ்விலும் நடைமுறைப்படுத்த முயலும் இவ் பரிசோதனை சமூகங்க்ளை நாம் எமது வாழ்வு முறைகளை கட்டமைக்கும் பொழுது, சீரமைக்கும் பொழுது கவனத்தில் எடுத்து கொள்ளுதல் நன்று.

1கருத்துக்கள்

At 8:37 PM, Blogger ROSAVASANTH said...

தமிழ் சமூகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கேரளாவில் இருக்கிறது. ராஜன்குறை அது குறித்து ஒரு முறை எழுதியிருந்தார். உங்கள் இணைப்புகளை இனிதான் பார்க்கவேண்டும்.

 

Post a Comment

<< Home