ஒரு பால் திருமணம் - கனடாவின் திண்டாட்டம்
ஒரு பால் திருமணத்தை அங்கீகரிப்பதா, இல்லையா? இது கனடாவில் ஒரு முக்கிய சர்ச்சை. பெரும்பான்மை மாகனங்கள் அங்கீகரத்த நிலையிலும், கனடாவின் உயர்நீதி மன்றம் ஒரு பால் திருமணத்துக்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கும் நிலையிலும், ஆளும் லிபிரல் கட்சி, மற்றும் புதிய ஜனநாயக கட்சி, கியூபக் கட்சி ஆதவளிக்கும் நிலையிலும் பாராளுமன்றத்தினால் ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதர்க்கு எதிராக வலதுசாரிகளும் அனேக சமய தாபனங்களும் செயர்ப்படுகின்றார்கள்.
ஒரு பால் திருமணங்களை நோக்கி அடிப்படையில் சில கேள்விகள் எழுகின்றன. ஒரு பால் உறவுகள் இயற்க்கையானதா? இயற்க்கையானதென்றால் நல்லதென்று வாதிட முடியாது. ஆனால், ஒரு பால் உறவுகள் முன்னர் கூறப்பட்டது போன்று ஒரு மன அல்லது உடல் நோய் அன்று. இன்று ஒரு பால் உறவுகள் மனித இயல்பு என்றே ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு பால் உறவுகளின் திருமண அங்கீகாரம் சமூகத்திற்க்கு கேடு விளைவிக்குமா? இக் கேள்வி சற்று சிக்கலானது. ஆண், பெண் பெற்றோரே குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்பு என பொதுவாக கருதப்படுகின்றது. ஆயினும், பல வித கட்டமைப்புகளில் (ஒரு பெற்றவருடன், பெற்ற-பெறாத தாய் தந்தைகளுடன், கூட்டு குடும்பத்தில்) என குழந்தைகள் வளரும் இன்றைய சூழலில் ஒரு பால் குடும்பங்கள் கேடு விளைவிக்காது என்று கருதவே இடமுண்டு.
ஒரு பால் உறவுகள் திருமண அங்கீகரம் பல முறைகேடான (பல மனைவி-ஒரு கணவன், ஒரு மனைவி-பல கணவன்கள், பல கணவன்கள்-பல மனைவிகள்) திருமண முறைகளுக்கு வழிகோலுமா? கனேடிய சட்டத்தில் திருமணம் இரு மனிதர்களுகிடையானது என வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்று சட்டமைப்புக்கள் உலகில் உண்டு. இஸ்லாமிய-இந்திய சட்டப்படி ஒரு முஸ்லீம் நான்கு மனைவிகளை திருமணம் செய்யலாம். தமிழர்கள் கடவுளான முருகனுக்கும் இரு மனைவிகள் உண்டு. சில சமூகங்களில் சமூக திருமணங்களும், பல வித கட்டமைப்புக்கள் கொண்ட திருமணங்களும் உண்டு. இந் நிலையில் திருமணத்தின் சட்ட இலக்கணம் எதிர் காலத்தில் கனடாவில் மேலும் மாற்றம் அடையலாம். அதனால், ஒரு பால் திருமணத்தை அங்கீகரித்தால்தான் மாற்றமடையும் என்று கூறுவது பொருத்தமில்லை.
இறுதியாக, திருமணம் ஒரு சமய, சட்ட, சமூக சடங்கே. அதை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு நிலைகளில் அணுகுகின்றார்கள். சிலருக்கு அது தேவை, சிலருக்கு அது தேவையில்லை. இந்நிலையில் ஒரு பால் திருமணங்களை அங்கீகரிப்பதால் எக் கேடும் விளையபோவதிலை, மாறாக சில மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதாக கருதவே இடமுண்டு.
0கருத்துக்கள்
Post a Comment
<< Home