மிருக உணவும் தாவர உரிமையும்
கோழி, ஆடு, பன்றி, மாடு, மீன் மற்றும் கடலுணவு ஆகியவை தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்வது இன்று வழமை, அதுவே பரிமான பொருளாதார வளர்ச்சி என்றும் பொதுவாக கருதப்படுகின்றது. இவ் வியாபாரத்தில் மிருகங்கள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றன, ஆனால் உற்பத்தியாளர்களோ, அரசோ, உண்பவர்களோ மிருகங்களின் உணர்வை பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. (http://www.veganoutreach.org/whyvegan/animals.html, http://www.meetyourmeat.com/) காரணம், உற்பத்தியாளர்கள் மிருகங்களை உயிர் அற்ற பொருட்கள்போலவே கருதி, அவ்வாறே கையாண்டு உணவு பொதியாக்கி விற்பனை முகவர்களுக்கு அனுப்புகின்றார்கள். அரசாங்கம் இச் செயற்பாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உணவு தேவை கருதி மிருகவதை பற்றி அக்கறை காட்டுவத்தில்லை. உணவு உற்பத்தியில் இருந்து விலகி வாழும் மக்களுக்கு உணவு எப்படி தங்களை வந்தடைகின்றது என்பதில் அக்கறை இல்லை.
மனிதநேய அடிப்படையிலும், மிருக உரிமை நோக்கிலும் குமுகாயத்தின் இச் செயற்பாட்டை சிலர் எதிர்கின்றனர். இவ் ரீதியில் அவர்கள் தாவர உணவை ஆதரிக்கின்றனர். இவர்களிடம் முன்வைக்கப்படும் முதல் ஆட்சோபனை, நீங்கள் தாவரங்களை கொலை செய்கிறீர்களே என்பதுதான்? சிலர் அக்குற்றச்சாட்டை ஏற்று கொண்டு, தாங்கள் தாவரங்களை வதைத்து, கொலை செய்த்துதான் உண்கின்றோம் என்கின்றார்கள். காந்தி கூறியபடி மனிதன் அகிம்சையில் முற்றிலும் ஒழுங்க முடியாது, ஆனால் இயன்றவரை முயலவேண்டும் என்ற கருத்துப்பாட்டையே இவர்களும் முன்வைக்கின்றார்கள். (http://www.vegetus.org/essay/plants.htm, http://www.animalactivist.com/)
(மிருக உணவை மற்றவர்கள் மிருகங்களின் உயிருக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து உண்பதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. மிருகங்கள் துன்புறுத்தப்படுதலையும், தொழிற்சாலை முறையில் உற்பத்தி செய்யப்படுவதையுமே நான் எதிர்கின்றேன். மீனவன் மீன் உண்பதையோ, உழவன் கோழி உண்பதையோ அல்லது விற்பதையோ நான் எதர்க்கவில்லை.)
சிலர் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் உணர்வு இருப்பதையே மறுக்கின்றனர். சிலர் மிருக-தாவர உணர்வை பொருட்படுத்த தேவையில்லை என்று கருதுகின்றனர். மேலும் சிலர் உலகில் மிருகங்களும் தாவரங்களும் மனிதனுக்காகவே படைக்கப்பெற்றன, ஆகையால் அவற்றை எப்படி பயன்படுத்தினாலும் தகும் என்கிறார்கள். எமக்கும் குரங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசம் மிகவும் சிறிது ("Gaps in the Mind") என்று விஞ்ஞானிகள் கூறிய பின்பும் எப்படி மிருகங்களுக்கு இருக்க கூடிய உணர்வை மறுப்பது, அல்லது பொருட்படுத்தாமல் விடுவது. முன்னர் மனிதன் தன்னையும் இப்பூமியையும் மையத்தில் வைத்து பார்த்துகொண்டிருந்தான், ஆனால் இப்பூமி பிரபஞ்சத்தில் மற்றும் ஒரு கிரணமே, அதில் மனிதன் ஒரு விலங்கே என்று அறிந்து கொண்டான். அப்படிப்பட்ட பிளையை மீண்டும் செய்யாமல், மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் மத்தியில் மனிதன் தன்னை ஏகாபத்தியாக கருதிகொள்ளாமல் அவற்றின் உணர்வுகளுக்கும், உயிர்களுக்கும், இருப்புக்கும் மதிப்பளிப்பு நடப்பதே நன்று.
6கருத்துக்கள்
மூன்று விதயங்கள்:
ஒன்று,
ஒரு முறை பாஸ்டன் பாலாஜி சொன்னது இந்த வலைத்தளம்:
themeatrix.com
இரண்டு,
ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தும் விலங்குகளை எப்படிக் கையாளுவது, என்ன மாதிரியான சோதனைகளைச் செய்யலாம்/செய்யக் கூடாது என்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. (எல்லோரும் ஒழுங்காகக் கடைபிடிப்பார்களா என்பது தனிக்கதை!).
கடைசியாக, அசைவம் சாப்பிட மாட்டோம் என்பதாலேயே மற்றவர்களை விட உயர்வாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் உயர்சாதி மனப்பான்மையையும் கண்டு கொள்ள வேண்டும்.
நக்கீரன் உணவுக்காக கோழி மற்றும் மிருகங்கள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்று காட்டும் ஒரு டிவிடி பார்த்தேன். கொஞ்ச நாட்களாக என்னால் ஒன்றும் சாப்பிட முடியாமல் போய் விட்டது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து மீண்டும் சாப்பிடத் தொடங்கி விட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மனதைப் போட்டுக் குழம்புவதிலும் பார்க்க ஒன்றும் தெரியாமல் இருப்பது நலம்..
அடுத்து 4ம் திகதி வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கு மறக்காமல் வாருங்கள். மதியில் வலைப்பதிவில் தகவல்கள் இருக்கின்றன.
நல்ல பதிவு...
புதியதோர் உலகம் செய்வோம்...அதில் கெட்ட மிருக உணவுதனை வேரோடு அறுப்போம்.
சுந்தரவடிவேலின் பின்னூட்டத்தைப் பார்த்தேன்...
//கடைசியாக, அசைவம் சாப்பிட மாட்டோம்...//
"எல்லாவற்றிலும் அவர்களுக்கு எதிராகவே நாம் இருப்போம்...அவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள்...அதனால் நாம் சாப்பிட்டே தீருவோம்..." என்று கொள்க... நல்ல மனப்பான்மை..வாழ்க!
சூப்பர்.. ஜீவா!
நற்கீரன் நல்லதோர் வலைப்பதிவு, நான் சைவ உணவு சாப்பிடுபவன்தான் ஆனால் சுந்தரவடிவேல் கூறுவது "அசைவம் சாப்பிட மாட்டோம் என்பதாலேயே மற்றவர்களை விட உயர்வாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் உயர்சாதி மனப்பான்மையையும் கண்டு கொள்ள வேண்டும்."எனபது யதார்ததிற்கு முரணான மிகைப்படுத்தப்பட்ட கூற்று. நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த Workshop ஒன்றிற்குக் கலந்து கொண்டு சைவ உணவு ஒன்றும் இல்லாமையால் மத்தியானம் பட்டினி இருக்கவேண்டி ஏற்பட்டது. நான் சைவ உணவுதான் உண்கின்றேன் அதனால் ஏனையவர்கள் அதைத்தான் சாப்பிடவேண்டும் என்றுகூறவில்லை.
Post a Comment
<< Home