பொருளாதார தத்துவங்கள்
எதை உற்பத்தி செய்வது?
எப்படி உற்பத்தி செய்வது?
எப்படி பகிர்ந்தளிப்பது?
இவையே ஒரு குமுகாயத்தின் அடிப்படை பொருளாதார கேள்விகள். பல்வேறு பொருளாதார தத்துவங்கள் அல்லது நடைமுறைகள் இக் கேள்விகளுக்கான பதில்களை தர முனைகின்றன. அவை:
1. மரபு பொருளாதாரம் (Traditional Economic System)
2. நிலபிரபுத்துவம் (Feudalism)
2. பாசிசம் (Fascism)
3. பொதுவுடமை (Communism)
4. சோசலிசம் (Socialism)
5. திறந்த சந்தை (Free Market Economic System or Capitalism)
6. எழுவரல்/இடைநிலை (Liberal/Mixed Economic System)
7. காந்திய பொருளாதாரம் (Ghandian Economic System)
மரபு பொருளாதாரம்
மரபு பொருளாதாரம் ஆதிவாசிகளின் மிகவும் எழிமையான காடு, வயல், கடல் சார்ந்த பொருளாதார நிலையையே குறிக்கும் (எ.கா: அந்தமான் ஆதிவாசிகள்). இவர்களின் கலாச்சார வளர்ச்சி இன்மை, கடின குறுகிய வாழ்க்கை இவ் வழிமுறையின் வரம்புகள் (limits) எனலாம்.
நிலபிரபுத்துவம்
வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் விவசாயம் கற்று கொண்டான். விவசாயத்தின் பலனாக கிராம நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புக்களின் மிகவும் பரவலான வடிவந்தான் நிலபிரபுத்துவம். விவசாயத்திற்க்கு முதலான நிலத்தை உரிமைப்படித்திக்கொண்ட பிரபுக்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பை பெற்று கூலி வழங்கி ஒழுங்கியதே நிலபிரபுத்துவம். இந்தியாவில் இது பல கிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றது. நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இவ் நடைமுறை இட்டு சென்றது என்பது இன்று கண்கூடு.
பாசிகம்
பாசிகம் என்பது ஒரு குமுகாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வதிகாரமுறையில் பொருளாதார மற்றும் மற்றைய விதயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ் அதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ் அதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். பெனிற்ரோ முஸ்ஸிலினியின் இத்தாலி, கிற்லரின் யேர்மனி பாசிகத்திற்கு உதாரணங்கள்.
பொது உடமை பொருளாதாரம்
பொது உடமை பொருளாதார தத்துவத்தின் முக்கிய மூன்று கூறுகள் பின்வருமாறு:
1. உற்பத்தி மார்க்கம், உடமைகள் அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
2. எதை, எப்படி உற்ப்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒரு மையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
3. மக்கள் அவரவர்க்கு இயன்றபடி உழைத்து தமக்குரிய சம பொருளாதார பங்கை பெறுவர்.
நடைமுறையில் பொது உடமை சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலின, உதாரணங்கள் சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.
பொது உடமை பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனித தொழில் முனைவுகள், முயற்ச்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. அரசிடம் அதிகாரம் குவியப்படுவதால் ஊழல், அதிகார துர்பிரியோகத்திற்கும் இத் தத்துவம் வழி கோலுகின்றது.
சோசலிசம்
சோசலிசம் பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம சந்தர்ப்பதை நிலை நிறுத்தும் கோட்பாடுகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உத்தரவாதத்திற்க்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி அமைகின்றன.
திறந்த சந்தை பொருளாதாரம்
திறந்த சந்தை அல்லது முதலாளித்துவ பொருளாதார தத்துவம் தனி உடமை உரிமையை வலியுறுத்துகின்றது. குமுகாயத்திற்க்கு பயனளிக்கும் பொருட்களை சேவைகளை செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் தனியார் வியாபார தாபனங்களை திறந்த சந்தை வலியுறுத்துகின்றது. எது எப்படி உற்ப்பத்தி செய்யப்படுதல் என்பதை திறந்த சந்தையே தீர்மானிக்கின்றது. அதாவது மக்கள் பொருட்களை சேவைகளை சந்தையில் தெரிவதன் மூலம் வியாபார தாபனங்களிற்க்கு தமது விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கின்றார்கள்.
அரசு இயன்றவரை இத் தனியார் நிறுவனங்களை சுயமாக இயங்க விட வேண்டும் என்பதும், திறந்த சந்தை ஊடாக மக்கள் தங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யலாம் என்பதும் இத் தத்துவத்தின் முக்கிய கூறுகள்.
நடைமுறையில் இத்தத்துவம் பொருளாதார வழங்கள் அனைத்தையும் ஒரு குறுகிய அதிகார வர்கத்திற்க்குள் குவியவே வழி செய்கின்றது. மேலும், குமுகாயத்தின் சமத்துவத்தை பேணுவத்திற்கும், பொது நலத்தை பேணுவதற்க்கும் இத் தத்துவத்தில் வழி சொல்லப்ப்டவில்லை.
எழுவரல்/இடைநிலை பொருளார தத்துவம்
திறந்த சந்தை, பொது உடமை ஆகிய இரு துருவ தத்துவங்களையும் உள்வாங்கி, ஒரு வித நடு நிலை தத்துவமாக எழுவரல் வெளிப்படுகின்றது. திறந்த சந்தை பொருளாதார முறை தத்துவத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பொருளாதார நிபுனர் கினீசியன் (Keynesian) அவர்களின் தத்துவங்களையும் எழுவரல் உள்வாங்கியுள்ளது. பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசின் பங்கை கினீசியன் வலியுறுத்தினார். எழுவரல் தத்துவம் திறந்த சந்தையை பொதுவாக ஏற்று கொள்ளும் அதே சமயம் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமத்துவத்தை பேணல், சுற்றாடலை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் அரசு பங்களிக்கின்றது.
காந்திய பொருளாதார தத்துவம்
காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாக கொண்டது. தன் நிறைவு, சுய சார்பு, கூட்டு செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது. சுற்றாடல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது.
(வழமை போல "பொருளாதார தத்துவங்கள்" ஒரு மேலோட்டமான பார்வையே. ஒவோரு தத்துவமும் நீண்ட வரலாற்றையும், விபரிப்புக்களையும், பின்புலன்களையும் கொண்டவை. இங்கே ஒரு பட்டியல் ஒன்றையே தர முயன்றுள்ளேன்.)
9கருத்துக்கள்
//ஒவோரு தத்துவமும் நீண்ட வரலாற்றையும், விபரிப்புக்களையும், பின்புலன்களையும் கொண்டவை. இங்கே ஒரு பட்டியல் ஒன்றையே தர முயன்றுள்ளேன்.) //
ஒவ்வொரு தத்துவத்தையும் தனித்தனிப் பதிவாகத் தரலாமே என்றெண்ணியபடி வந்தேன். நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். தனித்தனிப் பதிவாக எழுதலாமே?
-மதி
கருத்துக்கு நன்றி.
எழுதலாம்!
நேரம் வரும் பொழுது முயற்ச்சிக்கின்றேன்.
சோசலிசத்தைச் 'சமவுடமை' எனும் சொல்மூலம் வெளிப்படுத்துகிறார்களே. நீங்கள் பாவிக்கவில்லை. அச்சொற்பாவனை சரிதானே?
'குமுகாயம்' எனும் சொல்லைப் பாவிக்கும் நீங்கள் அதைப் பாவிக்காமல் விட்டதேனோ?
முடிஞ்சா உங்க பதிவின் அகலத்தைக் கொஞ்சம் அதிகரிச்சீங்கன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். எழுத்து அளவு கூடக் கொஞ்சம் குறைக்கலாம் - ஆனால் இந்தப் பெரிய அளவை விரும்புபவர்கள் இருக்கலாம்.
வசந்தன்:
சோசலிசத்துக்கு தமிழ் சொல் தேடி பார்த்து விட்டுதான் அதை அப்படியே உபயோகித்தேன். சமவுடமை பொதுவாக உபயோகிக்கப்படும் சொல்லோ என்று தெரியவில்லை. அதன் அர்த்தம் பொருந்துமா என்றும் தெரியவில்லை.
செல்வராஜ்:
உங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கின்றேன்.
தம்பி கீரன்,அறியத் தருவது.
நீர் வெறும் சொல்லாடலைக் கொண்டு சமவுடமைக் கோட்பாட்டை புரியாது கருத்திடுகிறாய்.இதன் அநுப அறவுகூட உமக்குக் கைகூடவில்லை.எனவேதான் வெறும் பல்லைச் சப்புகிறாய்.மார்க்சீயம் குறித்த உன் புரிதலைச் சொல் பார்போம்.எதை எங்கே தவறாகக் கண்டாய்?சோவியத்தைத் தாலியறத்தது யாரென்று உனக்குப் புரியுமோ?அமெரிக்காவும் அதன் நேச நாடுகளென்று நேட்டோக் கூட்டணியும்,மற்றும் போப்பாண்டவனும் அந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிச் சமூக ஏகாதிபத்தியமாக்கி,இறுதியில் அரச முதலாளியமாக்கிக் குழப்பியெறிந்தார்கள்.என்னடா தம்பி புரியுதோ?சும்மா மல்லுக்கட்டமால் கொஞ்சம் மார்க்சீயம் படியேன்ராப்பா!
"கருணா" அவர்களுக்கு:
தங்களின் கருத்துக்கு நன்றி.
பொதுவுடமை கோட்பாடுகள் முழுவதுமாக தவறு என்று நான் சொல்லவில்லை. மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து விட்டதால் பொதுவுடமை பிழை என்று கருதுவது தவறு, அப்படி நான் சொல்லவில்லை. அக் கோட்பாடுகளே இந்தியாவில் கேரளா முன்மாதிரி மானிலமாக வளம் பெறு உதவின. சீனா இன்று ஒப்பீட்டளவில் சமத்துவமான பலமான குமுகாயமாக பரிமானிக்கவும் அக் கோட்பாடுகள் உந்தின. மேலும், இன்றும் அத்தத்துவங்களை உள்வாங்கி வாழும் பல பரிசோதனை சமூகங்களை காணலாம் (thefec.org). எனவே பொதுவுடமை கோட்பாடுகள் முற்றிலும் தவறு என்று நான் கருதவும் இல்லை வாதிடவும் இல்லை.
சோவியத் யூனியன் வீழ்ந்தற்கான காரணங்கள் பல, அதை பற்றி ஆராய இப்பொழுது எனக்கு தேவை ஏதும் இல்லை. மார்சீய மூல நூல்கள் விரிவாக நான் படிக்கவில்லை என்பது உண்மையே, ஆயினும் அதன் சாரம்சம் அறிய நான் முயன்றிருக்கின்றேன், இனியும் முயலுவேன்.
நன்றியடா தம்பி!நீ சொல்வதில் பலவுண்மைகளைப் புரிந்துகொண்டேன்,எங்கே நீயும் தப்புத்தப்பாக முதலாளியம் சொல்வதையேற்றுவிட்டியோவென நினைத்தேன்.உன் மார்க்சிய அறிவு வளர்ந்து,ஆக்கம் பல செய்ய என் வாழ்த்துக்கள்!
//சோசலிசத்தைச் 'சமவுடமை' எனும் சொல்மூலம் வெளிப்படுத்துகிறார்களே. நீங்கள் பாவிக்கவில்லை. அச்சொற்பாவனை சரிதானே?//
சமவுடமை பொதுவுடமை போன்ற சொற்கள் போதுமானவையல்ல என்ற உணர்வு எப்போதும் எனக்கு இருக்கிறது.
சொஷலிஸம் என்று எழுதாமல் சோசலிசம் என்று எழுதி வரலாம் போல் தோன்றுகிறது. நாளடைவில் அது ஒரு தமிழ்ச்சொல்லாய் நிலைத்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது.
Post a Comment
<< Home