இணையத்தில் தமிழ் படித்தல்
தமிழை பள்ளியில் முழுமையாக கற்க இயலாமல், தகுந்த ஆசான்கள் இல்லாமல் இருக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் நல்ல ஆயுதம். தமிழ் மொழி என்ற கடலில் நீந்த கற்று கொள்வது என்பது தெளிவான எதிர்பார்ப்புகளுடன் ஒழுங்கமைத்து செயற்பட்டால் நிச்சியம் முடியும். பின்வரும் இணைய தளங்கள் தமிழ் கற்பதற்க்கு உதவும்.
தமிழ் சூழலில் தமிழ் கற்றல்
ஓளி கோப்புக்களை அல்லது தொலைக்காட்ச்சி பதிவுகளை பிரதானமாக உபயோகித்து தமிழ் சூழலில் தமிழ் கற்பதற்க்கு உதவும் ஒரு அரிய தளம்.
இணைய உதவியுடன் தமிழ் படிப்பித்தல்
இணையத்தை பாவித்து ஆசிரியர் உதவியுடன் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள உதவும் பென்சல்வேனிய பல்கலைக்கழ்கத்தின் தளம். தொடக்க நிலையில் இருந்து படிப்படியாக உயர்நிலை நோக்கி பயிற்சிகள் உள்ளன. ஒலி கோப்புக்கள், யாவா நுட்பம் கொண்டு செய்யப்பட்ட பயிற்ச்சிகள், படிநிலை தேர்வுகள் என்பன சிறப்ம்சங்கள்.
"தமிழ் பாடநூல்"
ஆங்கிலம் மூலம் படிபடியாக தமிழ் கற்பதற்க்கு 38 பகுதிகளை கொண்ட "தமிழ் பாட நூல்".
"ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்"
செந்தில் குமார் சேரன் அமெரிக்காவில் ஆங்கில சூழலில் வளர்ந்து பின் தன் சுய முயற்ச்சியால் தமிழ் கற்றவர். அவரது அனுபவங்கள் பலருக்கு உந்துதலாக வழிகாட்டலாக அமையும். பயிற்ச்சிகள், கதைகள், பாட்டுக்கள், உரையாடல்கள், பொது சொற்கள் என பல மூலங்களை தந்து பாவித்து தமிழ் படிக்க இத்தளம் உதவுகுகின்றது.
"தமிழ் கற்போம்"
பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வி ஆராச்சி அனுபவங்கள் இணைய நுட்பங்களை ஒருங்கே இணைத்து உருவாக்கப்பட்டுவரும் படி நிலை தமிழ் பாடங்கள்.
தமிழில பேசலாம் வாங்க
இணையத்தில் பல ஒலி பதிவுகளை உபயோகித்து, வேகமாக தமிழை பேச உதவ முயலும் தளம். உச்சரிப்பில் அழகான ங்க இருக்கின்றது.
தமிழ் இணைய பல்கலைகழகம்
உலக தமிழர்களுக்கு தமிழ் கல்வி பயில உதவும் முறையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தளம். உத்யோக பூர்வமான, பட்ட படிப்புக்கான சேவைகளை தருகின்ற தளம்.
உங்களுக்கும் வேறு தளங்கள் தெரிந்தால் பட்டியலில் இனையுங்களே.
8கருத்துக்கள்
சுட்டிகளுக்கு மிக்க நன்றி
சிரமப்பட்டுச் சுட்டிகளைச் சேகரித்து இட்டமைக்கு நன்றிகள்.
நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.
தார்சன், வசந்தன் நன்றிகள்.
எனது எழுத்து பிழை:
மேலே, "ஆசிரியர் உதவியுடன்" என்று அமையவேண்டிய சொற்தொடர் "ஆசிரியர் உதயுடன்" என்று எழுதப்பட்டிருக்கின்றது :-(
மழழைக்கல்விக்கு!!!!
http://www.tamilvu.org/courses/primer/bp000001.htm
from:www.tamilvu.org
thnx for the links.
தமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு
http://worldinmind.blogspot.com/null என்ற பதிவிற்கான பின்னூட்டம், அங்கே பின்னூட்டப் பெட்டி திறக்க முடியாததால் இங்கே இடுகின்றேன்...
இது நிச்சயம் ஒரு புரட்சி தான், தேடி தேடி புத்தகங்களை படித்ததை விட இங்கே பல கோணங்கள், பல பரிமானங்களில் விடயங்கள் அலசப் படுகின்றன. அட நாம் இப்படி பார்க்கவில்லையே இந்த விடயத்தை என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன, சுட சுட தரப்படும் மறுமொழிகளும்,பின்னூட்டங்களும் அதற்கு தரப்படும் மறுமொழிகளும் வாசிப்பில் அடுத்த நிலைக்கு வலைப்பதிவுகள் எடுத்துச் செல்கின்றன
தமிழில் தப்பில்லாமல் எழுத வேண்டும் என்ற ஆதங்கம் அதிகமாக உணரத் தொடங்கிய வேளையில் உங்கள் பதிவு கண்ணில் பட்டது. மிக்க நன்றி. என்னைப் போன்றவர்களுக்கு மிக மிக உதவும் தளங்கள்.
University of Texas - A Guide to Learning Tamil
http://link.lanic.utexas.edu/asnic/radhakrishnan/publications/tamilscriptLM/tamilscripttoc.html
Post a Comment
<< Home