<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, December 16, 2005

கொத்தடிமைகள்

தமிழ் சூழலில் (தமிழ் நாடு, இலங்கை) சாதி காரணமாகவோ, அல்லது தாழ்ந்த பொருளாதார நிலை காரணமாகவோ ஒரு தனி நபர், குடும்பங்கள், அல்லது சில சாதி குழுக்கள் பிற "உயர்" சாதி அல்லது உயர் பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு காலம் காலமாக வேலை செய்வது கொத்தடிமை எனலாம். பொதுவாக கொத்தடிமைத்தனம் தமிழ் சமூக அமைப்பின் ஒரு உள்ளற கட்டமைப்பே. எஜமானர்களை தவிர்த்து இவர்களுக்கென்று ஒரு தனி வாழ்வோ, அல்லது அப்படிப்பட்ட வாழ்வமைப்பதற்கான சூழ்நிலையோ இல்லை. அவர்களின் உள் மன சித்திரம் அடிமை வாழ்விற்க்கு ஒத்துபோவதற்க்கு ஏற்றமாறு பழகிவிட்டிருக்கின்றது.

வீடு சுத்தம் செய்தல், சமைத்தல், கழிவுகளை அகற்றுதல், வயல் வேலை, கல்லுடைத்தல், கட்டங்கள் கட்டும் வேலை, கைத்தறி போன்ற உடல் உழைப்பு பெரிதும் தேவைப்படும், அல்லது பிறர் செய்ய தயங்கும் வேலைகளை கொத்தடிமைகள் செய்ய பணிக்கப்படுவது வழக்கம். பொதுவாக இவர்களுக்கு உணவுவே பிரதான வேதனம். இவர்கள் ஒதுக்கப்பட்ட வசதிகள் அற்ற வதிவிடங்களில், அல்லது சேரிகளில் வசிப்பார்கள்.

கொத்தடிமைகள் இழி சாதிகளாகவோ அல்லது தீண்டாமை சாதிகளாகவோ கருதப்படும், சமூக படிநிலையில் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் இருந்து வருகின்றார்கள், அல்லது அச் சமூகங்களே அப்படி இருக்கின்றார்கள்.

கொத்தடிமைகள் வைத்திருப்பது மன்னர், காலனித்துவ ஆட்சிகளின் கீழ் வழமையா இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவிலோ, இலங்கையிலோ கொத்தடிமை வைத்திருப்பது ஒரு குற்றமுள்ள செயல். எனினும் இன்னும் கொத்தடிமைகள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

கொத்தடிமைகளை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்பவர்களில் இருந்து வேறுபடுத்தி காண வேண்டும். பொதுவாக கூலி வேலை செய்பவர்களுக்கு எவ் நேரத்திலும் வேலையிலிருந்து விலக சுதந்திரம் இருக்கும், ஆனால் கொத்தடிமைகளுக்கு அவ்சுதந்திரம் இருக்காது.

ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளாக அல்லது கொத்தடிமைகள் போன்று வேலைசெய்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்களையும், முழுமையாக கொத்தடிமைகளாக கொள்ள முடியாது.

இன்னும் கொத்தடிமைகள் இருக்கின்றார்கள் என்பது உறைக்கின்றது. அதேவேளை, நாம் அனைவரும் எதோ ஒரு வகையில் அடிமைகள்தானே?

3கருத்துக்கள்

At 12:37 PM, Blogger சுந்தரவடிவேல் said...

கொத்தடிமை வழக்கம் தளர்ந்து வருவதாகவே நினைக்கிறேன், தமிழகத்தில். தஞ்சை மாவட்டப் பகுதிகளில் "பண்ணையாள்" என்று ஒரு வகை உண்டு. இவ்வகை ஆள் அந்த வீட்டிலேயே இருப்பார், வீட்டில், வயலில் எல்லா வேலைகளையும் செய்வார். வீட்டினருகிலேயோ அல்லது வேறெங்கேனுமோ அவருக்கு ஒரு கொட்டகை இருக்கும். கூப்பிட்ட போது வருவார். இவ்வகைக்கும் கொத்தடிமைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள். ஆனால், மலைப்பகுதித் தேயிலைத் தோட்டங்களில் இன்னும் கொத்தடிமை வழக்கம் இருப்பதாகச் செய்திகளைக் கண்டிருக்கிறேன்.

 
At 12:39 PM, Blogger நற்கீரன் said...

thamizhachchi தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

நாம் எமக்காக வேலை செய்வதற்கும், நாம் பிறருக்காக அடிமைகளாக வேலை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. நான் செய்யும் வேலையில் தாழ்வு உயர்வு காண முயலவில்லை.

யாழ்ப்பாணத்தில் கொத்தடிமை வைத்திருப்பது ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்தது. யாழ் தேச வழமை சட்டத்தில் கூட அதனையொட்டிய சட்டங்கள் இருந்தன. சமீக காலத்தில் கூட பல மலையக தொழிலாளர்கள் வீட்டு வேலைகளில் கொத்தடிமைதனமாகவே நடத்தப்பட்டனர்.

பின் வரும் இணைப்பை நோக்கினால், தமிழ் நாட்டில் இன்னும் கொத்தடிமைத்தனம் இருப்பது புலனாகின்றது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4511639.stm

எனினும், உங்களின் தகவல் சரியாக அமைந்தால், மகிழ்ச்சியே.

 
At 12:50 PM, Blogger நற்கீரன் said...

சுந்தரவடிவேல், கருத்துக்களுக்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரியென்றே நினைக்கின்றேன்.
பழைய முறையிலான கொத்தடிமைதனம் போகின்றது.
புதிய முறையான கொத்தடிமைத்தனங்கள் தோன்றுகின்றன, அவற்றுக்கு நம்மில் பலரும் அடிமைகள்தான். அதை பற்றி பின்னர் ஒரு பதிவில் பகிர்கின்றேன்.

மேலே தந்த சுட்டி:

http://news.bbc.co.uk/2/shared/spl/hi/
world/05/slavery/html/1sa.stm

 

Post a Comment

<< Home