<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, February 10, 2006

சமுதாய தொழில்முனைவகம்

சமுதாய தொழில்முனைவகம் (Social Enterprise) ஒரு புதிய வியாபார சமுதாய சேவை நிறுவன மாதிரியாகும். ஒரு குறிப்பிட்ட சமுதாய சேவையை மையப்படுத்தியும் பொருளாதார தளத்தில் தன்னிறைவுடனும் தாங்குதிறனுடனும் இயங்கும் அல்லது அப்படி இயங்க முயற்ச்சிக்கும் தாபனங்கள் சமுதாய தொழில்முனைவகம்கள் ஆகும். இவை இரு குறிக்கோள்களை கொண்டு இயங்குகின்றன, ஒன்று சமூக சேவை, மற்றது அச்சமூக சேவைக்கு உதவும் ஒரு வியாபார உத்தி அல்லது சேவை.

சமுதாய தொழில்முனைவகம்கள் இலாபத்தையே ஒரு குறியாக கொண்டு இயங்கும் முதலாளித்துவ தாபனங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். முதலாளித்துவ வியாபர தாபனங்கள் என்ன சேவை, என்ன பொருட்கள் விற்கப்படுகின்றன எனபதைவிட இலாபம் ஈட்டுவதையே பிரதான இலக்காக கொண்டு இயங்குகின்றன. மாற்றாக சமுதாய தொழில்முனைவகம்கள் தெளிவான சமூக சேவையை முன்நிறுத்தியும், அதற்கு உதவும் அதனோடு சார்ந்த வியாபார சேவையை பக்கபலனாகவும் கொண்டு இயங்குகின்றன.

ஒரு நிலையில் சமுதாய தொழில்முனைவகம் முதலாளித்துவ வியாபர முறைமைக்கும் சமூக சேவை நிறுவனத்துக்குமான ஒரு கூட்டு கட்டமைப்பு எனலாம்.

1கருத்துக்கள்

At 6:07 AM, Blogger rnatesan said...

ஐயா,
நன்றி.நல்லதும் இருக்கிறது,கெட்டதும் இருக்கிறது,தங்கள் வலையை இப்போதுதான் மேய ஆரம்பித்துள்ளேன்.விமர்சனம் தொடரும்!!தங்களின் அறிமுகத்தை காணவில்லையே!!

 

Post a Comment

<< Home