<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, April 09, 2006

றோய்யன் போர்

றோய்யன் போரே (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டு நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்பையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.

கிரேக்க காப்பியங்கள் கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் என பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதை புலங்களை கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.

கிரேக்க நாட்டின் ஒரு நகரம் ஸ்பாற்ரா ஆகும். ஸ்பாற்ராவை ரின்டர்யஸ் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு கெலன் என்ற ஒரு அழகிய மகள் இருந்தாள். கெலனை திருமணம் செய்ய கிரேக்க நாட்டின் பல இளவரசர்கள் விரும்பினர். ஆயினும் ரின்டர்யஸ் அவளை எந்த ஒர் இளவரசனுக்கும் மணம் முடிக்க பயந்தான், ஏன் என்றால் பிற இளவரசர்கள் கோபம் கொண்டு அவனது நகரை அழித்துவிடுவார்கள் என்பதால். இவர்களில் ஒர் இளவரசன், ஓடியஸ் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு யோசனையை ரின்டர்யஸ்சுக்கு சொன்னான். கெலனை மணக்க விரும்புகின்றார்களிடம் இருந்து ஒரு சத்தியம் பெறும்படி கேட்டான். யார் யார் எல்லாம் கெலனை மணக்க விரும்புகின்றார்களோ அவர்கள் எல்லோரும் ஒரு சுயம்வரத்தில் அவள் தேர்ந்த இளவரசனனூடான திருமணத்தை மதித்து பாதுகாப்பார் என்பதுவே. சில பிணக்குகளுக்கு பின் அதற்கு அனைத்த இளவரசர்களும் இணங்கினர். கெலன் மெனெலஸ் என்ற இளவரசனை தெரிந்து திருமணம் செய்தாள். மெனெலஸ் ஸ்பாற்ராவின் அரசுரிமையை பெற்றான். ஒடியஸ்சின் உதவிக்கு கைமாறாக தனது உறவினியான பெனலிப்பி என்ற பெண்ணை மணம் செய்ய ரின்டயர்ஸ் ஒடியஸ்சுக்கு உதவினான். ஒடியஸ் தன் தீவு நாடான இத்தாக்காவிற்கு திரும்பி பெனலிப்பியுடன் வாழ தொடங்கினான்.

இச்சமயம் பரிஸ் என்ற றோய் நாட்டு இளவரசன் ஸ்பாற்ராவிற்கு வந்தான். பரிஸ் கெலனை ஒரு வரமாக அஃறோடைரி என்ற காதல் தேவதைக்கு சார்பாக ஒரு தீர்ப்பு சொன்னதன் பலனாக பெற்றிருந்த்தான். பரிஸ் கெலனை கவர்ந்து றொய்க்கு மீட்டு சென்றான்.

கெலனின் தெரிவையும் திருமணத்தையும் பாதுகாக்க சத்தியம் செய்திருந்த கிரேக்க இளவரசர்கள் அனைவரும் அவளை மீட்பதற்காய் றோய் சென்றனர். இதனையே "ஆயிரம் கப்பல்களை ஏவிய ஒர் அழகு" என்று கிறிஸ்ரபர் மார்லொவ் பின்னர் விபரித்தான். கிரேக்கத்திற்கும் றோய்க்கும் அதன் நேச நாடுகளுக்கும் இடம்பெற்ற போரே றோயன் போராகும். இப்போரில் கிரேக்க படைகள் வென்று, றோய் அழிந்து போனது.

இப்போர் அல்லது இப்போர் ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது நோக்கி எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரை பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்தில், பண்பாட்டில், வரலாற்றில் ஒர் முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.

றோய்யன் போர் - தமிழ் விக்கிபீடியா

2கருத்துக்கள்

At 8:10 AM, Blogger வஜ்ரா said...

நற்கீரன் அவர்களே,

எனது இஸ்ரேலும், சங் பரிவாரங்களும் என்ற பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். அது எனக்கு நீங்கள் எழுதிய மடல் போல் உள்ளதால் மட்டுறுதலில் நிருத்தி வைத்து விட்டேன். (வெளியிட வேண்டுமா?)

நானே, தட்டுத் தடுமாறி, இதுக்கு எந்த "ர" அதுக்கு எந்த "ன" என்று பலவாறு யோசித்து, பல நெரங்களில் யூகித்து தமிழ் எழுதிக் கொண்டிருகிறேன். என்னை போய் விக்கிபீடியா article எழுதச் சொல்லுகிறீர்களே. முயற்சிக்கிறேன், நிச்சயமாக அது தலை சிறந்த article ஆக எல்லம் இருக்கது. மற்றபடி, என்னால் எதேனும் உதவி, தகவல் போன்றவை வேறு யாரவது இஸ்ரேல் பற்றி எழுதுபவர்களுக்கு வேண்டுமென்றால் நான் உதவத் தயாராக இருக்கிறேன்.

இங்கு தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால் இங்கு யாரும் வந்து வேலை பார்த்து Settle எல்லாம் ஆவதில்லை. ஆராய்ச்சி மாணவர்களாக வருவார்கள், 2 முதல் 5 ஆண்டுகாலம் இருப்பர்கள், பிறகு அமேரிக்காவுக்கு பரந்து விடுவார்கள். இங்கு யூதர்களைத் தவிர மற்றவர்களுக்கு Citizenship எல்லாம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல.

தங்கள் வரவேற்பிற்கு நன்றி, நான் எப்படி உதவ முடியும் என்பதை, sankar.mr@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொண்டு விளக்கவும்.

நன்றி,
ஷங்கர்.

பி.கு., இந்த பின்னூட்டம், இங்கு சம்பந்தமில்லாததால், publish செய்யவேண்டாம்.

 
At 11:07 AM, Blogger Doctor Bruno said...

அது சரி... இந்த கதைக்கும் இராமாயணத்திற்க்கும் நிறைய ஒற்றுமை உள்ளது போல் தெரிகிறதே

 

Post a Comment

<< Home