<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Wednesday, July 06, 2011

பேராசிரியர் கா. சிவத்தம்பி - எம்மை நாமே தமிழில் ஆராய்தல்

எம்மைப் பற்றி வெள்ளைத் தோல்காரர் வந்து களப் பணி செய்து, ஆங்கில மொழியில் ஆராய்சிக் கட்டுரைகள் படைத்தால்தான் அதற்கு மதிப்புத் தருவது என்ற தாழ்வு மனப்பான்மை எம்மிடம் உள்ளது. இந்த மனப்படிவத்தை உடைப்பதில் கா. சிவத்தம்பியின் பங்களிப்பு கணிசமானது. அவர் அறிவியற் தமிழுக்கு, குறிப்பாக சமூக அறிவியற் தமிழுக்கு செய்த பங்களிப்பு முதன்மையானது. படிநிலைச் சமூகம், சமூக வரலாற்றியல், திராவிட இயக்கம் என எமது சமூகத்தை கூறுபோட்டு இவர் திறனாய்வு செய்தார். எம்மை நாம் விளங்கிக் கொள்ள இவரது கட்டுரைகள், விமர்சனங்கள் மிகத் துணை புரிந்தன.

இலக்கியவாதிகளே பெரும்பான்மையாக உள்ள தமிழ் எழுத்துலகில் சிறந்த விமர்சகராக, திறனாய்வாளராக, கட்டுரையாளராக கா. சிவத்தம்பி திகழ்ந்தார். இவருக்குப் படைப்புத்திறன் இல்லை. இவர் உணர்வுகள் அற்ற வெறும் கருத்து பிரவாகங்களை மட்டுமே செய்கிறார் என்று சிலர் இவரை விமர்சிப்பது, அவர்களின் அறியாமையே ஆகும். இவரது படைப்புக்களில் உச்ச சிந்தனையும், படைப்புத்திறனும், பரவிய தேடல்களும் உண்டு என்பதை அவர்கள் அவற்றைப் படிப்பதன் மூலமே அறிந்து கொள்ளலாம்.

கா. சிவத்தம்பியின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பெரும் இழப்பு. பேரழிவின் விழிம்பில் நிற்கும் எம்மை ஆராய்ந்து உதவ ஒரு நல்ல ஆசானை இழந்து நிற்கிறோம். கா. சிவத்தம்பியின் மறைவு தமிழிற்கு ஒரு பெரும் இழப்பு. இத்தனை வீச்சுள்ள அறிவர் இன்னும் பத்தாண்டுகள் இருந்திருந்தால் என்ன பங்களிப்புச் செய்துருப்பார் என்று எண்ணிப் பார்க்கிறேன். இற்றைப்படுத்தல், அவரது சொல். இன்னும் எத்தனை எத்தனை சொற்கள் எமக்குத் தேவை.

அவரது கருத்துக்களை, ஆய்வுக் களங்களை, விமர்சனத் தளங்களை நாம் முன்னெடுத்துச் செல்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

2கருத்துக்கள்

At 11:20 PM, Blogger அருண்மொழிவர்மன் said...

நல்ல பதிவு நற்கீரன்

//இற்றைப்படுத்தல், அவரது சொல். இன்னும் எத்தனை எத்தனை சொற்கள் எமக்குத் தேவை. //
புதிய தகவல். தகவலுக்கு நன்றிகள்

 
At 11:12 PM, Blogger மாலதி said...

சிறப்பு சிறப்பு இது போன்ற மிகசிறந்த இடுகைகால்தான் இன்று தேவை உளம் கனிந்த பாட்டுகள் நன்றி

 

Post a Comment

<< Home