<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Sunday, December 29, 2013

சங்கீதா ரிச்சார்ட்- கனடாவின் வீட்டுப் பணியாளர்கள் - தொழிலாளர்களுக்கான திறந்த சந்தை

ஒப்பந்தப் படியோ, அல்லது அமெரிக்க அடிப்படை ஊதியச் சட்டப் படியோ ஊதியம் வழங்கவில்லை, வீட்டுப்பணியாளரை துன்புறுத்தினார் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இந்திய இணைத் தூதுவர் தேவயானி கோபர்கடே ஐக்கிய அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக இந்திய அரசியல்வாதிகள் கொதிப்படைந்து உச்சகட்ட அழுத்தத்தை அமெரிக்கா மீது செலுத்தி வருகிறார்கள்.  பிற எந்த நிகழ்வுகளின் போதும் குடுக்காத அழுத்தத்தை இந்தியா இப்பொழுது செய்து வருகிறது.  என்ன உண்மை என்று தெளிவாக அறிய முன்னரே இந்தியா தனது மற்றைய குடிமகளை பலிகொடுத்து தூதரை காப்பாற்றும் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, இந்தியாவின் இன்றைய ஏற்றதாழ்வு சூழ்நிலையை நன்கு சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.  இன்றைய இந்தியா தனது வெளிக் காட்சியைப் பற்றி, தனது எசமானிகளைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறது, அதன் தொழிலாளர்களைப் பற்றி அல்ல.

கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மூன்றாம் உலக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவது புதிதல்ல, அது வழமையாக நடைபெறும் ஒன்று.  பார்த்தும் பார்க்கதது போல இங்கே உள்ள அரசுகள் நடந்து கொள்கின்றன.  கனடாவில் பல்லாயிரக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள் குடியுரிமை ஆசையைக் காட்டி பிலிப்னைசு, சீனா போன்ற நாடுகளில் இருந்து மேட்டுக்குடி வீடுகளுக்கு வேலைக்கு ஒப்பந்தப்படி அழைக்கப்படுகிறார்கள்.  பிள்ளைப் பார்ப்பது, முதியோரைப் பராமரிப்பது, வீட்டுப் பராமரிப்பு போன்ற வேலைகளை சங்கீதா போன்று மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தங்கி இருந்து செய்கிறார்கள்.  கனடாவில் இத் திட்டத்துக்குப் பெயர் Live-In Caregiver Program ஆகும்.  இவர்கள் வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும், வேறு வேலைகள் செய்ய முடியாது.  இவர்களுக்கு இருக்கும் ஒரே விடுதலைப் பாதை, பல ஆண்டுகளுக்குப் பின்பு ஒப்பந்தம் முடிவடைந்து அவர்கள் குடியுரிமை பெறுவது ஆகும்.  அப்படி அவர்கள் தமது பணியை முடித்தாலும், குடியுரிமை தருவதில் கனடிய அரசு பல இழுத்தடிப்புக்களைச் செய்யும். 

திறந்த சந்தை, திறந்த சந்தை என்று உரக்கக் கக்கும் மேற்குலக நாடுகள், தொழிலாளர்களுக்கான திறந்த சந்தையை ஏன் உருவாக்க மறுக்கின்றன.  ஒரு உண்மையான திறந்த சந்தையில் எங்கே இருந்தும் யாரும் ஒரு வேலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  ஆனால் குடிவரவு, தொழிலாளர்களின் சுதந்திரமான நகர்வு என்று வரும்போது வலதுசாரிகளின் திறந்த சந்தைக் கொள்கை புத்துக்குள் போய் ஒளித்துக் கொள்கிறது.  ஆப்பிரிக்காவின், மூறாம் உலகின் உண்மையான வளர்ச்சியில் மேற்கு உலகுக்கு அக்கறை இருக்கும் ஆனால், அங்குள்ள அடிப்படைத் தொழிலாளர்களை சுதந்திரமாக மேற்குலகில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய கொத்தடிமை முறைமையைத் தகர்க்கலாம். 

Labels: , , , ,

3கருத்துக்கள்

At 5:24 PM, Blogger priya rajkumar said...

the problem is, how america is treating counsulate high ranking person.they made her naked asked her to bend and searched her private part etc pls check what is marshall serch in US law.nobody is criminal until is proven by court.

 
At 5:53 PM, Blogger நற்கீரன் said...

This comment has been removed by the author.

 
At 5:54 PM, Blogger நற்கீரன் said...

அமெரிக்க காவல்துறை சட்டத்துக்குப் புறம்பாக நடந்து இருந்தால், அப்படி நடந்து இருக்க வாய்ப்புக்கள் நிறைய உண்டு அது கண்டிக்கப்படவேண்டியது. அதே வேளை, இந்தியாவின் ஒர் உயர் அதிகாரி தனது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தினார் என்பதும் கண்டிக்கப்பட வேண்டியது. இந்திய ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ சங்கீதா ரிச்சார்டின் குற்றச்சாட்டுக்கள் தவறு என்று வழக்கு இல்லாமலே தீர்மானித்து தூதுதருக்காக வக்காளத்து வாங்குவதுவே சிக்கல்.

 

Post a Comment

<< Home