உறங்கி கிடக்கும் தமிழ் கணிமை தளங்கள்
உத்தமம்
உத்தமத்தின் தளத்தையே இப்பொழுத்து காணவில்லை. (தற்சமயம் அவ்முகவரி (www.infitt.org) சற்றும் தொடர்பில்லாத இணைப்புக்கு இட்டு செல்கின்றது. பல நல்ல கட்டுரைகள் இனி மீண்டும் எப்பொழுது இணையம் ஏற்றுப்படும்?) இவ்வருடம், இனி தமிழ் இணைய மாநாடு நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. வெளி வட்டத்தில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை. பாரிய பொறுப்பொன்றை ஏற்று, சிறப்பாகவே செயல்ப்பட்ட, அல்லது அப்படி தோன்றிய உத்தமம் திடீர் என மொளனமானது ஆர்வலர்களுக்கு கவலையே, எனினும் பலர் அலட்டி கொள்வதாக தெரியவில்லை.
தமிழ் லினிக்ஸ்
தமிழ் லினிக்ஸ் இல் முனைப்பாக செயல்பட்டுவந்த வெங்கட் அவர்கள் ழ பிரிவின் பின் சற்று ஓய்ந்து விட்டார் போல தெரிகின்றது. அக் குழுவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவ் வலைத்தளத்திலும் எந்த உயிர் துடிப்பும் இல்லை. (http://www.thamizhlinux.org/main/)
தமிழ் கணினி சங்கம்
பல மாணவர்களை உள்வாங்கி பல செயல்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த தமிழ் கணினி சங்கத்தின் இணையதளமும் இன்று கணினியில் இல்லை. (http://www.kanithamizh.org/)
ழ கணினி - இணைய தளம் செயல்படுதாக தெரியவில்லை. (http://www.zhakanini.org/English/index.php)
தமிழா - தமிழா குழு தொடர்ந்து செயல்படுகின்றார்கள். ஆனால், அவர்களின் இணையத்தளம்தான்(http://thamizha.com/) இன்னும் இன்றைப்படுத்தப்படவில்லை. விளங்கிகொள்ளலாம்.
தமிழ் மின்நூலகங்களுக்கான ஒரு வலைப்பின்னல் (http://bharani.dli.ernet.in/tadilnet/) - எந்த முன்னேற்றமும் அவதானிக்க முடியவில்லை.
சில காலங்களுக்கு முன்னர் நன்றாக செயற்பட்ட www.tamil.net, http://www.intamm.com/ அமைதியாகி விட்டது, அமைதியாகி பல காலம் ஆகிவிட்டது.
மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டும், தகவல் செறிவாகவும் வெளிவந்த நுட்பம்(www.nudpam.com) இணைய சஞ்சிகையும் தற்சமயம் இணையத்தில் இல்லை.
கணினி விடயங்களை தாங்கி வந்த பிறதொரு தளம் http://www.digitalq.net, அதுவும் தற்சமயம் இல்லை.
தன்னாவலர்கள் எல்லோரும் ஒரேயடியாக ஓய்வுக்கு போய்விட்டார்களோ, அல்லது திரைமறைவில் இயங்குகின்றார்களா. தெரியவில்லை.
அல்லது, சுனாமி, அடைமழை அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பற்றி அலட்ட முக்கியம் இல்லைதானே, அவர்கள் அவ்வேலைகளில் இருக்கலாம்!