அறிவியல் தமிழின் வியூகி
தமிழ்நாடு அரசு தமிழ் வழிக் கல்வியை திட்டமிட்டு அழிக்கையிலும், உலகமயமாதல் தமிழ் மொழியை மெல்லக் கொல்ல முயற்சி செய்கையிலும், எதிர்க்க முடியும் என்று காட்டிய முன்னோடிகளில் தலையான ஒருவர் மணவை முஸ்தபா. தமிழின் பெருமை பேசி, அதன் இலக்கியங்களை மட்டும் பேசி, அதன் அறிவுக் கூர்முனையை மழுங்க விட்ட தமிழ் அறிஞர்கள் மத்தியில் அறிவியல் தமிழுக்காச் செயற்பட்டவர். பல களங்களில் அவர் தனியே நின்று போராடினார். பல களங்களில் பலரை இனைத்துப் போராடினார்.
அவரின் படைப்புக்கள் தமிழின் பெரும் சொத்துக்கள். அவரின் சிந்தனைகள் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கான வியூகங்கள். அவர் எதற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தாரோ, அந்தப் பணிகளை முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் பெரும் மரியாதையாக இருக்கும்.

Labels: அறிவியல் தமிழ், தமிழ்வழிக் கல்வி