என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?
காவல்காரனே வேட்டையாடிறான்.
கடத்தி போகிறான். சுட்டுப் பொசுக்கிறான்.
கைது செய்து, வதைத்து கொல்கிறான்.
என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?
மொழியைப் பழிக்கிறான். நிலத்தைப் பறிக்கிறான்.
கல்வியைச் சிதைக்கிறான். சமயத்தை இழிக்கிறான்.
கடையை உடைக்கிறான். வீட்ட இடிக்கிறான்.
என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?
உலக நாடுகளை கேலி செய்கிறான்.
மனித உரிமை என்னென்று கேட்கிறான்.
இரத்த களரியே தீர்வு என்கிறான்.
என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?
அரசு என்கிறான். மருந்தைத் தடுக்கிறான்.
உணவை மறுத்து, பட்டினி போடுறான்.
பறந்து வந்து குண்டும் போடுறான்.
என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?
எபியும் இல்லை. எழுதுபவனும் இல்லை.
ஐயரும் இல்லை. அருட்தந்தையும் இல்லை.
குழந்தை, மாணவர், பெற்றோர், முதியவர்; யாரையும் விடவில்லை.
என்ன செய்வோமோ, யாரிடம் போவோமே?