<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, November 02, 2007

சு. ப. தமிழ்ச்செல்வன் - ஒரு தமிழீழப் போராளியின் மாதிரி

தமிழீழப் போராளிக்கென்றொரு மாதிரி இருந்தால், சு. ப. தமிழ்ச்செல்வன் அந்த மாதிரி எனலாம். அறிவிலும், ஆற்றலிலும், அதிகாரத்திலும், செயலிலும் ஒரு சிறந்த ஆளுமை. கேள்விகளுக்கும், கருத்துக்கும், மாற்றுக் கருத்துக்கும் புலிகளிடம் இருந்த வலுவான மறுமொழி. இன்றுருக்கும் சூழலில் மாற்று இல்லா ஒரு தகமை. அவரின் இழப்பு புலிகளுக்கும், அவர்களுடன் பலவழிகளில் பிணைக்கப்பட்டிருக்கும் தமிமீழ மக்களுக்கும் ஒரு பாரிய இழப்பு. துயரமிக்க இழப்பு.


போர்மனப் போக்காளர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி. சமாதானப் போக்காளர்களுக்கும், அரசியல் தீர்வை வேண்டி நிற்போர்களுக்கும் கிடைத்த ஒரு பாரிய பின்னடைவு. புலிகளின் சிரித்த, அரசியல் முகத்கை கொன்றவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆனால் அதன் மறுமுகம் கொடிய விளைவுகளைத் தரும் என்பது மட்டும் நிச்சியம்.